Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
நாடளாவிய ரீதியில் இன்று முதல் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்

Sep 14, 2026 - 04:00 PM

நாடளாவிய ரீதியில் இன்று முதல் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்
Mobitel Inner 1278

உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் இன்றைய தினம் (14) முதல் ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். 

இதன்படி, இன்றைய தினம் முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இந்த உள்ளூராட்சி வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய தேசிய நிகழ்ச்சி திட்டம் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தப்படும். 

பொதுமக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள், இலக்கியத் தேவைகள் உள்ளடங்கலாக அனைத்து விடயங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த உள்ளூராட்சி வாரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

இன்றைய தினம் நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்பாட்டு தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், அமைச்சுகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வருவதற்கு பதிலாக, பொதுமக்களை நாடிச் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் செயல்பாடு இன்றைய தினத்தில் இடம்பெற்றதாகவும் அமைச்சர் கூறினார். 

மேலும், நாளைய தினம் பொதுப் பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்தந்தப் பகுதிகள் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரித்தல் மற்றும் புதிதாகச் சேர்த்தல் இதன் மூலம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன் செப்டெம்பர் 16ஆம் திகதி சுற்றாடல் சார்ந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், "நாளைக்கு ஒரு கன்று மற்றும் மர நடுகை" என்ற அடிப்படையில் இந்த நாள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினர் மத்தியில் சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்களில் அவர்களைச் சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் சுற்றாடலில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல், கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பல திட்டங்கள் அன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

செப்டெம்பர் 17ஆம் திகதி சுகாதாரம், துப்புரவு மற்றும் டெங்கு ஒழிப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அங்கு இனிவரும் மழைக்காலத்துடன் டெங்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயத்தைத் தடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாத்து அவர்களை இணைத்துக்கொண்டு டெங்கு ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சு எதிர்பார்த்துள்ளது. 

செப்டெம்பர் 18ஆம் திகதி இலக்கியம், கல்வி, நூலகம், நலன்புரி மற்றும் விளையாட்டு தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய அந்தத் துறைகள் சார்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் இலக்கியப் படைப்புகளைப் பாராட்டுதல், சுவைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இறுதி நாளான செப்டெம்பர் 19ஆம் திகதி சிறந்த சேவையை வழங்கிய அரசு ஊழியர்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் பாராட்டுதல், அவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு ஏதேனும் நிவாரணங்களை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

இந்த உள்ளூராட்சி வாரத் திட்டத்தின் மூலம் கிராமிய மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் உள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, பொதுமக்களை இணைத்துக்கொண்டு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்கனவே திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

Mobitel 1278