Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையில் தினசரி பாவனைக்கு உகந்த Nokia Feature Phone தெரிவுகளை HMD அறிமுகம் செய்துள்ளது

Sep 14, 2026 - 03:59 PM

இலங்கையில் தினசரி பாவனைக்கு உகந்த Nokia Feature Phone தெரிவுகளை HMD அறிமுகம் செய்துள்ளது
Mobitel Inner 1278

ஐரோப்பாவின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான Human Mobile Devices - HMD, HMD 100, HMD 102, புதிய Nokia 105 மற்றும் Nokia 110 Power உள்ளடங்கலாகத் தனது புதிய ரக feature phones களை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Nokia தொலைபேசிகளின் பெருமைமிகு தயாரிப்பாளரான HMD நிறுவனம், Nokia வர்த்தக நாமத்தின் பாரம்பரியமிக்க கடினத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை நவீன புதுமைகளுடன் ஒருங்கிணைத்து, உள்ளூர் நுகர்வோரின் அன்றாட வாழ்க்கைக்கு எளிதில் பொருந்தக்கூடிய மிகச் சிறந்த நம்பகமான தெரிவுகளை வழங்குகின்றது. 

இலங்கையின் மொபைல் சந்தையில் feature phone பிரிவு எல்லாக் காலத்திலும் ஒரு முக்கிய அங்கமாகவே திகழ்கின்றது. ஏனெனில், நாட்டின் கணிசமான அளவிலான மக்கள் தங்களது தினசரித் தகவல் தொடர்புகளுக்கான முதன்மைச் சாதனமாக இத்தகைய தொலைபேசிகளை நம்பியிருக்கின்றனர். அதேவேளை, டிஜிட்டல் உலகிலிருந்து சற்று விலகியிருக்க (digital detox) விரும்பும், அத்தியாவசியமான தொடர்பாடலைத் தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் குறிப்பிட்ட அளவிலான தொழில் வல்லுநர்களும், பயணிகளும் நீண்ட காலம் உழைக்கக்கூடிய ஒரு சிறந்த மாற்றுத் தொலைபேசியாக இவற்றை தெரிவு செய்கின்றனர். இந்த புதிய தயாரிப்பு தொலைபேசிகள், உள்ளூர் பயனாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும், சிறப்பான பற்றரி ஆயுள், உறுதியான வடிவமைப்பு, நடைமுறைக்கு உகந்த தினசரி வசதிகள் மற்றும் உண்மையான மலிவு விலை ஆகியவற்றின் மீது நேரடியாகக் கவனம் செலுத்துகின்றன. 

இந்த வரிசையில் முன்னணியில் திகழும் மேம்படுத்தப்பட்ட Nokia 110 Power, கடினத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்ற தனது பாரம்பரியத்தை இப்போதும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது 1750 mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பற்றரியை கொண்டுள்ளதால், 15.5 நாட்கள் வரை சார்ஜ் நிக்கக்கூடிய வசதியை வழங்குகின்றது. இதன் மூலம் தினசரி சார்ஜ் செய்ய வேண்டிய கவலை முற்றாக நீங்குகிறது. அத்துடன், இந்தத் சாதனத்தில் எல்இடி பிளாஷ் விளக்குடனான கேமரா, உள்ளமைக்கப்பட்ட MP3 பிளேயர், Wireless FM ரேடியோ மற்றும் மெமரி கார்ட் மூலம் கொள்ளளவை விரிவாக்கக்கூடிய வசதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக, புதிய Nokia 105, எளிமை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற மலிவான விலை ஆகியவற்றில் ஒரு சிறந்த தரநிலையை வழங்குவதுடன், நேரடியான, நம்பகமான அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி தேவைகளுக்கான மிகச்சிறந்த தெரிவாகவும் அமைகின்றது. 

HMD 102, வளைந்த விளிம்புகளுடனான நேர்த்தியான தோற்றம் மற்றும் ஸ்மார்ட்போனைப் போன்ற கமரா வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டு, இப்பிரிவில் ஒரு நவீன பாணியிலான தெரிவை வழங்குகின்றது. இதில் flash உடனான கமரா, MP3 பிளேயர், Wireless FM ரேடியோ மற்றும் auto call recorder, torch போன்ற பயனுள்ள தினசரி ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகச் சிறந்த பெறுமதியை எதிர்பார்ப்பவர்களுக்கு, HMD 100, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பற்றரி, நீடித்த உழைப்பைக் கொண்ட உடல் அமைப்பு மற்றும் மிகவும் பயனுள்ள dual LED torch ஆகியவற்றுடன் சிறந்த அடிப்படை நம்பகத்தன்மையை வழங்குவதுடன், உயர்தர hardware களை ஒவ்வொருவரினதும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கிடைக்கச் செய்கின்றது. 

HMD வளர்ந்து வரும் ஆசியா பொது முகாமையாளர் திரு. விவேக் கந்தெல்வல் கருத்துத் தெரிவிக்கையில், “நம்பகமான, அத்தியாவசிய தொடர்பாடல் என்பது தினசரி தேவையாக அமைந்துள்ள இலங்கை எமக்கு மத்திய சந்தையாக அமைந்துள்ளது. இந்தப் புதிய தெரிவுகளுடன், தரத்தில் ஒப்பற்ற பெறுமதிசேர் தெரிவுகளை நாம் வழங்குகிறோம். Nokia 110 Power உயர்ந்த பற்றரி காலம் அல்லது HMD மாதிரிகளின் சிறந்த ஏற்புடைமை ஆகியவற்றுடன், அனைவருக்கும் நிலைத்திருக்கும் தொழில்னுட்பத்தை கொண்டு சேர்ப்பதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.” என்றார். 

HMD இலங்கை, நேபாளம் மற்றும் சிங்கப்பூர் தலைமை அதிகாரி திரு. கயான் விஜேதிலக கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில், பல சேவைத் துறைகளில் (நிர்மாணம், கடற்றொழில், செயற்பாடுகள் போன்ற...) மற்றும் இல்லங்களில் பிரதான இணைப்பாக feature phone அமைந்துள்ளது. எமது புதிய தெரிவுகள், Nokia hardware இன் நீடித்த உழைப்பு மற்றும் HMD இன் நவீன, தினசரி பாவனைக்கான உள்ளம்சங்களைக் கொண்டமைந்துள்ளன. இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் மற்றும் தினசரி தேவைகளுக்கு பொருந்தும் வகையில் இந்த சாதனங்களை நாம் வடிவமைத்துள்ளோம்.” என்றார். 

இந்த சாதனங்கள் திருப்திகரத்தன்மையை வழங்குவதுடன், தினசரி நீடித்த பாவனைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 1 வருட மாற்றீட்டு உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன. HMD 100, HMD 102, புதிய Nokia 105, மற்றும் Nokia 110 Power ஆகியன தற்போது நாடு முழுவதையும் சேர்ந்த தேசிய விநியோகத்தர்கள், Softlogic கொம்யுனிகேஷன்ஸ் மற்றும் பிரதான அங்கீகாரம் பெற்ற விற்பனை முகவர் நிலையங்களில் கிடைக்கும். 

Human Mobile Devices பற்றி 

Human Mobile Devices ஐச் சேர்ந்த நாம், மக்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதன் அடிப்படையில் நாங்கள் (HMD Global) செயற்பாடுகளை ஆரம்பிக்கிறோம். எங்கள் நுகர்வோர் சூழல் மற்றும் இயற்கையின் மீது மிகுந்த ஆர்வமுள்ளவர்கள். பெரும்பாலும் டிஜிட்டல் ஓவர்லோடில் மூழ்கி இருப்பதாக உணர்பவர்கள். மேலும் தமது நிதியிருப்பு பற்றி உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள். அதனால் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

வீட்டிலேயே தொலைபேசிகளை பழுதுபார்க்கும் வசதியை வழங்குகிறோம். மேலும் மிகவும் அவசியமான டிஜிட்டல் நேரத்தை ஒதுக்கத்தை வழங்குகிறோம். மேலும் தகவலுக்கு, பார்வையிடவும் www.hmd.com

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

Mobitel 1278