Sep 16, 2026 - 08:22 AM

போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) மாலை பேலியகொடை பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 950 போதை மாத்திரைகளுடன் பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























