Sep 18, 2026 - 05:39 AM

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (17) இடம்பெற்றது.
Cardiff இல் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க மாத்திரமே 37 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 146 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 12.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டொம் பெண்டன் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
குறித்த வெற்றியின் மூலம் 2 க்கு 0 என்ற அடிப்படையில் தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.





























