Sep 19, 2026 - 08:39 PM

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 125 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெத்தும் நிஸ்ஸங்க சிறப்பான தொடக்கத்தை அளித்து அதிரடியாக ஓட்டங்களைச் சேர்த்த போதிலும், மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பாக சோனி பேக்கர் (Sonny Baker), ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) மற்றும் வில் ஜாக்ஸ் (Will Jacks) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்படி, இங்கிலாந்து அணிக்கு 125 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





























