Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
இலங்கையை வௌ்ளையடிப்பு செய்தது இங்கிலாந்து

Sep 19, 2026 - 09:55 PM

இலங்கையை வௌ்ளையடிப்பு செய்தது இங்கிலாந்து
Mobitel Inner 1278

 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 

அத்துடன் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 3-0 என இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.


மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 35 ஓட்டங்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினர்.

 

125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்தார். அணித்தலைவர் ஹேரி புரூக் 33 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சோனி பேக்கர் தட்டிச் சென்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278