Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஓய்வுபெறும் அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து

Sep 19, 2026 - 11:14 PM

ஓய்வுபெறும் அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து
Mobitel Inner 1278

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹணவின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் சிறப்பு சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.

 

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற இந்நிகழ்வில் அஜித் ரோஹணவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

 

1966 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி பிறந்த அஜித் ரோஹண, கனம்பெல்ல ஜூனியர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார்.

 

பின்னர் 1988 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி உதவிப் பொலிஸ் பரிசோதகராக (SI) இலங்கை பொலிஸ் சேவையில் நேரடியாக இணைந்த அவர், தனது முதல் நியமனமாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் கடமைகளை ஆரம்பித்தார்.

 

பின்னர் லுணுகம்வெஹெர மற்றும் வதுரம்ப ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய அவர், அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வலஸ்முல்ல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில் பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டார்.

 

1999 ஆம் ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியாட்சகர் தர உயர்வுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அவர், 2005 ஆம் ஆண்டில் சூடானிலும் 2010 ஆம் ஆண்டில் ஹைட்டியிலும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் பணியாற்றினார்.

 

2007 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியாட்சகராக தரம் உயர்த்தப்பட்டு, பொலிஸ் தலைமையகப் பரீட்சைப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய அதேவேளை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தைப் பெற்று, சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

 

2012 ஆம் ஆண்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகராகவும் (SSP), 2016 ஆம் ஆண்டில் பிரதி பொலிஸ் மா அதிபராகவும் (DIG) தரம் உயர்த்தப்பட்ட அஜித் ரோஹண, 2021 ஜூன் 30 ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (Senior DIG) தரம் உயர்த்தப்பட்டார்.

 

தனது நீண்ட சேவைக்காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி உட்பட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ள அவர், பொலிஸ் சேவையின் போது வழங்கப்படும் பல விருதுகள், பதக்கங்கள், பொலிஸ் மா அதிபரின் விசேட பாராட்டுக்கள் மற்றும் சம்பள உயர்வுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278