Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அந்தமான் கடற்பகுதிகளில் இருந்து உடன் வௌியேறுமாறு அறிவுறுத்தல்

Sep 21, 2026 - 07:32 PM

அந்தமான் கடற்பகுதிகளில் இருந்து உடன் வௌியேறுமாறு அறிவுறுத்தல்
Mobitel Inner 1278

அந்தமான் தீவுகளை அண்டிய ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பலநாள் மீன்பிடி படகுகளையும் அப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான கடல் பகுதிகளை நோக்கி பயணிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அந்தமான் தீவுகளை அண்டி உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் அக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தாழமுக்கமாக வலுவடைந்து இந்தியா நோக்கி நகர்ந்து, இந்தியாவின் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, அந்தமான் மற்றும் வட வங்காள விரிகுடாவை அண்டிய கடல் பகுதியில் உள்ள பலநாள் மீன்பிடி படகுகள் உடனடியாக அக்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து விலகி தெற்கு நோக்கி, அதாவது இலங்கை நோக்கி பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும், அப் பகுதியில் மேலும் சில பலநாள் மீன்பிடி படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் பலத்த காற்று காரணமாக அப்படகுகளுக்கும் அவற்றின் பணியாளர்களுக்கும் ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278