Header Logo
Vallibel FD
Selan Bank
இந்தியா
பாலியல் தொல்லை - வைரலான வீடியோ!

Sep 22, 2026 - 10:52 AM

பாலியல் தொல்லை - வைரலான வீடியோ!
Mobitel Inner 1278

பீகார் மாநிலம் ஜமுய் நகரில் உள்ள பாடசாலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுவனும் சிறுமியும், கடந்த சனிக்கிழமை மாலை தங்களது பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மட்வா பஹாட் பகுதிக்கு சென்றுள்ளனர். 

பின்னர் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் நின்றிருந்த ஒரு கும்பல் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது. 

அக்கும்பல் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி, வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கித் துன்புறுத்தியுள்ளது. 

அச்சமயம் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறுவர்களு பின்னால் துரத்திச் சென்று, கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த கொடூரச் சம்பவத்தை அக்கும்பலை சேர்ந்த ஒருவன் தனது கைபேசியில் வீடியோ படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளான். 

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் சிறுவனின் சட்டையைப் பிடித்து இழுப்பதும், அச்சிறுவன் சிறுமியின் உதவியோடு தப்பிக்க முயற்சிப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மேலும், மற்றொரு நபர் சிறுமியின் கழுத்தைப் பிடித்து தூக்கிச் செல்ல முயன்றபோது, அச்சிறுவன் குறுக்கிட்டுத் தடுத்துள்ளான். 

அப்போது அக்கும்பலில் இருந்த ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அவர்கள் அங்கிருந்து கிளம்ப முயன்றபோதும் கை பிடித்து இழுத்துத் துன்புறுத்திய கும்பல், இருவரையும் மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. "நாங்கள் இனி இங்கு வரமாட்டோம், எங்களை விட்டுவிடுங்கள்" என அச்சிறுமி கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிய பிறகே அக்கூட்டம் அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளது. 

வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஜமுய் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

காணொளியில் இடம்பெற்றுள்ள மற்ற நபர்களை அடையாளம் காணும் பணிகளும், எஞ்சிய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குற்றவாளிகள் அனைவரும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

"இது நமது பண்பாடு கிடையாது; பெண்களின் உடல் மற்றும் தேர்வுகளின் மீது ஆண்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற ஆணாதிக்க மனநிலையே இதற்குக் காரணம்" எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்தும் அனைத்துக் குற்றவாளிகளும் ஏன் உடனடியாகக் கைது செய்யப்படவில்லை என்றும், பொதுவெளியில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது ஏன் என்றும் பீகார் அரசிற்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசை நோக்கிக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. பீகாரில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து 'ஜங்கிள் ராஜ்' (காட்டு ஆட்சி) நிலவுவதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, கலாச்சாரக் காவல் என்ற பெயரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், காணொளியில் உள்ள ஆதாரங்களின்படி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இச்சம்பவம் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278