Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அனுமதி

Sep 22, 2026 - 02:19 PM

ஶ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அனுமதி
Mobitel Inner 1278

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை மறுசீரமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அதன் கட்டுப்பாடு, ஒழுங்குமுறைப்படுத்தல், மேம்பாடு, வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்காகவே இச்சட்ட மூலத்தின் பிரதான நோக்கமாகிறது. 

நல்லாட்சி, நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் சம வாய்ப்பளித்தல் ஆகிய கோட்பாடுகளின் கீழ் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளும் இதில் அடங்குகின்றன. 

மேலும், கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரதும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்களிலிருந்து கிரிக்கெட்டைப் பாதுகாப்பதற்கும் தேவையான அதிகாரங்கள் மற்றும் பணிகளை இச்சட்டமூலம் மூலம் வரையறுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

2026 ஜூன் 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை மறு சீரமைப்பதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு, பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

Mobitel 1278