Sep 23, 2026 - 09:15 PM

வத்தளை, மஹபாகே பகுதியில் அமைந்துள்ள கணினி விற்பனையகம் ஒன்றில் இன்று (23) இரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த அவசர நிலைமை காரணமாக, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மஹபாகே பகுதிக்கு அருகில் கொழும்பு நோக்கிச் செல்லும் மருங்கில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.































