Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வடக்கு
கிளிநொச்சியில் மற்றுமோர் சோழன் உலக சாதனை நிகழ்வு!

Sep 23, 2026 - 07:28 PM

கிளிநொச்சியில் மற்றுமோர் சோழன் உலக சாதனை நிகழ்வு!
Mobitel Inner 1278

​கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயிலும், பிரஷாந்தினி நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய மாணவி செல்வி பி.எல். றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் சோழன் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு கிளிநொச்சி, கே.கே மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

​றெஜிஸ் றெஜிஸ்ரிகா தனது 9 ஆவது வயதில் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக பரதநாட்டியம் ஆடி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது இவரது 3 ஆவது உலக சாதனையாக அமைந்துள்ளது. 

​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டார். 

​இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், 

"ஒரு சிறுமியின் அசைக்க முடியாத கனவு, அதை மெய்ப்பிக்க அவள் மேற்கொண்ட இடைவிடாத பயிற்சி, அவளுக்குப் பின்னால் உறுதுணையாக நின்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பு. இவை அனைத்தும் ஒன்றிணைந்த போதுதான் இந்த அற்புதமான சாதனைப் பயணம் சாத்தியமாகியிருக்கிறது. வயது சிறியதாக இருக்கலாம். ஆனால் கனவுகளுக்கும் திறமைக்கும் எல்லையே இல்லை என்பதைத் தனது அசாத்திய முயற்சியால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் நமது இளம் சாதனையாளர் றெஜிஸ்ரிகா. 

இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தன்னம்பிக்கையையும், தோல்விகளைக் கண்டு அஞ்சாத விடாமுயற்சியையும் கற்றுத்தரும் ஒரு கலங்கரை விளக்கமாக றெஜிஸ்ரிகாவின் இந்த வெற்றிப் பயணம் அமைந்திருக்கிறது. 

​முறையான வழிகாட்டலும், உழைப்பும் இருந்தால் எந்தவொரு குழந்தையாலும் சாதனைகளின் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு இவரே சான்று. றெஜிஸ்ரிகாவை உலக சாதனையாளராக உருவாக்கிய அவரது பெற்றோர்களுக்கும், அவரது நடன ஆசிரியர் செல்வி அருணாசலம் கேதுசா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். 

​சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளைக்கான துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மரத்தினம், அன்னையின் கரங்கள் நிறுவன இயக்குநர் ஏரம்பு அன்னலட்சுமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் மகாலிங்கம் சத்தியகுமார், நுண்கலை மானி நாட்டிய வளர்மணி கிறிஸ்ரினா சத்தியசீலன், ஈழத் தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் இயக்குநர் சுதாகரன் வாசுகி, கிரிவலம் அறக்கட்டளையின் பொருளாளர் கே.ரி. பாரதி, வைத்தியர் இராமநாதன் கிருஷ்ணலிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக தங்கத்துரை சுசேந்தன், கதிரவேலுப்பிள்ளை சௌந்தரராஜா, வைத்தியர் வே. லதீஸ், ஊடகர் கியூ லோறன்ஸ் தெனாறன்ஸ், கலைமாமணி வ. ஏழுமலைப்பிள்ளை, கலாபூஷணம் பொ. உமாகாந்தன், எம்.ஏ. காந்திமதி, தவகலா அனுஷாந்தகுமார், பேபி ஆசிரியர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

Mobitel 1278