Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு

Sep 24, 2026 - 10:58 AM

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு
Mobitel Inner 1278

இலங்கையில் முந்திய குழந்தை பருவ (முன்பள்ளி) சிறுவர்களின் டிஜிட்டல் திரை (Screen Time) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, முந்திய குழந்தை பருவத்திலுள்ள சிறுவர்களில் 64 சதவீதமானோர் தினமும் அரை மணித்தியாலத்திற்கு அதிகமான நேரத்தை கைபேசிகள் அல்லது கணினிகளைப் பார்ப்பதில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, சிறுவர் ஒருவர் தினமும் அரை மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். 

இந்நிலையைக் கருத்திற் கொண்டு, முன்பள்ளிச் சிறுவர்களுக்காகச் சுகாதார மேம்பாட்டுத் திட்டம் ஒன்றையும் வழிகாட்டித் தொடர் ஒன்றையும் அறிமுகப்படுத்தச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து தெளிவுபடுத்துவதற்காகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க:"இலங்கையில் 64% சிறுவர்கள் திரைப் பயன்பாட்டை (Screen Time), அதாவது தொலைபேசி அல்லது பேட் (Pad) பயன்பாட்டை தினமும் 30 நிமிடங்களுக்கும் அதிகமாகக் கொண்டுள்ளனர். 

இது 30 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் அளவுகோலாகும். இதனிடையே, சிறுவர்களில் 32% பேர் தினமும் 10 - 11 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரமே உறங்குகின்றனர். 

சுமார் 43% சிறுவர்கள் உணவு உண்ணும்போது திரையைப் பார்த்தவண்ணமே உணவருந்துகின்றனர். உணவை விழுங்கும்போது உணவைப் பற்றிய கவனம் சிறுவர்களின் மனதில் இருக்காது. இதேவேளை, சுமார் 80% சிறுவர்களே இருவேளை பல் துலக்குகின்றனர்" என்றார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க:"சிறுவர்களைப் பராமரிப்பவர்கள் பெற்றோராகவோ அல்லது முன்பள்ளி ஆசிரியராகவோ இருந்தாலும், சுமார் 56% பேர் சிறுவர்கள் மீது கோபப்படும் நிலை காணப்படுகிறது. 

மேலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தந்தையர்களே குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளனர் என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

குழந்தைகளைப் பராமரிப்பது தாயின் பொறுப்பு மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது. 53% தந்தையர்களே குழந்தைகளுடன் நெருக்கமாகச் செயல்படுகின்றனர்..." எனக் கூறினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற  உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

Mobitel 1278