Sep 24, 2026 - 11:07 AM

Sterling Automobiles Lanka (Pvt) Ltd, அண்மையில் இரத்மலானையில் தமது பிரத்தியேக 'Sterling Aftercare Collision Repair and Body Shop’ (விபத்து பழுதுபார்ப்பு மற்றும் வாகன உடல் பழுதுபார்ப்பு) சேவை மையத்தை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் மேல் மாகாணம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொழில்முறை ரீதியான விபத்து பழுதுபார்ப்பு சேவைகளை மிக அருகில் கொண்டு வருகிறது. பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நவீன பழுதுபார்ப்புத் தொழில்நுட்பத்தை முழுமையான வாகன உடல் பழுதுபார்ப்பு, நிறப்பூச்சிடல் மற்றும் முழுமைப்படுத்தல் சேவைகளை ஒரே கூரையின் கீழ் இணைப்பதன் மூலம் நிபுணத்துவ ரீதியான வாகன பழுதுபார்ப்புகளை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான Sterling நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த புதிய மையம் ஏற்படுத்துகிறது.
Sterling Aftercare வலையமைப்பிற்கே உரித்தான சேவைத் தரநிலைகளின் கீழ் இயங்கும் இந்த மையமானது, கிட்டிய தன்மை என்பது தொழில்நுட்பத் துல்லியத்தின் இழப்பினால் அளவிடப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன மாதிரிகளுக்குமான வாகனக் கட்டமைப்பில் ஏற்படும் முழுமையான விபத்துப் பழுதுபார்ப்புகள், அழகு சார்ந்த வாகன உடல் சீரமைத்தல்கள், விரைவான பழுதுபார்ப்புத் தீர்வுகள், விரிவான வாகன வர்ணப்பூச்சு மற்றும் ரீபினிஷிங் ஆகியவற்றை மேற்கொள்வதற்காகவே, இந்த சேவை மையம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, Sterling Automobiles Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி (CFO) நளின் வர்ணகுல தெரிவிக்கையில், "இந்த பிரத்தியேக சேவை மையத்தை திறப்பதன் முக்கிய நோக்கம் எமது வாடிக்கையாளர்களுக்கு தொழில்முறை ரீதியான, உயர்தர விபத்து பழுதுபார்ப்புச் சேவையை வழங்குவதாகும். ஒரு விபத்தைச் சந்திப்பதற்கு அப்பால், நகரம் முழுவதும் நம்பகமான சேவையைத் தேடியலைய வேண்டுமென்கின்ற மன அழுத்தம் பெரும் சுமையாக அமைகிறது. திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள், அதிநவீன பழுதுபார்ப்புத் தொழில்நுட்பம் மற்றும் முழுமையான பெயிண்டிங் மற்றும் பினிஷிங் திறன்களைக் கொண்ட சேவை மையத்தை இரத்மலானையில் நிறுவுவதன் மூலம் வாகனக் கட்டமைப்பின் பாதுகாப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் தொழிற்சாலைத் தரத்திலான பினிஷிங் ஆகியவற்றில் கூர்ந்து கவனஞ்செலுத்தி வாகனங்களை நாம் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறோம்." என்றார்.
ஒரு விபத்திற்குப் பின்னர், சரியாக அறிய முடியாத பழுதுபார்ப்பு நேரம், கட்டம் கட்டமான பழுதுபார்ப்புக்கான இடங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பாதுகாப்புத் தரங்களை வாகன சாரதிகள் எதிர்கொள்கின்றனர். இரத்மலானை மையத்தில் முழுமையான மீளமைப்புச் செயன்முறையும், அழுத்தமற்ற, ஆவணப்படுத்தப்பட்ட பணிப்பாய்வுடன் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கட்டமைக்கப்பட்ட முறையிலான வாகனத்தை பெறுதல், முறையான சேத மதிப்பீடு, துல்லியமான வாகன உடல் பழுதுபார்ப்பு, பிரத்தியேக பெயிண்டிங், கடுமையான பல்தரப்பட்ட புள்ளிகளில் தரக் கட்டுப்பாட்டுக்கான பரிசோதனைகள், சரிபார்க்கப்பட்ட பின்னர் கையளிப்பு ஆகிய விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இந்த விரிவாக்கமானது, மேம்பட்ட பிரச்சினை கண்டறிதல் மற்றும் விபத்து சீரமைப்பு முதல் வழக்கமான பராமரிப்பு மற்றும் இயந்திரச் சேவைகள் வரை வாகன உரிமைத் தன்மையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாகன சாரதிகளுக்கு உதவுவதன் மூலம், ஒரு விரிவான பழுதுபார்ப்பு சேவை வழங்குநராக Sterling Automobiles நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்துகிறது. 2007 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், 5 இற்கும் மேற்பட்ட சேவை மையங்கள் கொண்ட வலையமைப்பு, 400 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள், 100,000 இற்கும் மேற்பட்ட செயற்பாட்டில் உள்ள வாடிக்கையாளர் தளத்துடன் இந்த புதிய மையத்தை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கிறது. Sterling Aftercare மையத்தின் கிளையமைப்பு நுகேகொடை, கடவத்த, மினுவாங்கொடை, காலி மற்றும் இரத்மலானை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
சீரான பழுதுபார்ப்புத் தரநிலைகள் மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட சேவை நேரம் போன்ற விடயங்களை எதிர்பார்க்கும் தனிப்பட்ட கார் உரிமையாளர்கள், நிறுவன வாகனத் தொகுதிகளை கையாள்வோர், காப்புறுதி மதிப்பீட்டாளர்கள், வாகன வர்த்தகப் பங்காளர்கள் ஆகிய அனைவருக்கும் இரத்மலானை மையமானது நேரடியாகச் சேவையாற்றுகிறது.
வாகன சாரதிகள், காப்புறுதிப் பங்காளர்கள் மற்றும் வாகன தொகுதிகளை கையாள்வோர் 011 7 600 800 எனும் வாடிக்கையாளர் அவசர இலக்கம் மூலமாக அல்லது மேலதிக தகவல்களுக்கு www.sterling.lk எனும் இணையதளத்தை பார்வையிடுவதன் மூலமாக சேத மதிப்பீடுகளை பெற பதிவு செய்யலாம் அல்லது விபத்து பழுதுபார்ப்புக்கான ஆதரவைக் கோரலாம்.
ஏனெனில் ஒரு விபத்து நிகழும்போது, உங்களுக்குத் தேவை தற்காலிக நிறப்பூச்சுக்கான பணியல்ல, மாறாக தொழிற்சாலைத் தரத்திலான மறுசீரமைப்பே ஆகும்.































