Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
வகுப்பறைகளைத் தாண்டிய அறிவியல்: TikTok மூலம் எளிதாகும் STEM கல்வி

Sep 24, 2026 - 04:35 PM

வகுப்பறைகளைத் தாண்டிய அறிவியல்: TikTok மூலம் எளிதாகும் STEM கல்வி
Mobitel Inner 1278

மனித வரலாற்றின் பெரும்பகுதியில், அறிவு சிலரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. நாம் அறிந்துகொள்ளும் விடயங்கள் என்பது, யார் கல்வியைப் பெற முடிகிறது, நூலகங்களைப் பயன்படுத்த முடிகிறது, பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடிகிறது அல்லது கற்றுத்தர விரும்பும் ஒரு நிபுணரைக் கண்டறிய முடிகிறது என்பதைப் பொறுத்தே அமைந்திருந்தது. இணையத்தின் வருகை அந்தச் சூழலை மாற்றி, எவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அளப்பரிய அறிவைக் கைக்கெட்டும் தூரத்தில் கொண்டு வந்து சேர்த்தது. 

ஆனால், அறிவை அணுகக்கூடியதாக மாற்றுவது என்பது அதை ஜனநாயகப்படுத்துவதன் முதல் படி மட்டுமே. மக்கள் அதைச் சென்றடைய முடிகிறதா, புரிந்து கொள்ள முடிகிறதா, அதை நம்ப முடிகிறதா மற்றும் அவர்கள் கற்றுக்கொள்வதில் தமக்கான இடத்தை உணர முடிகிறதா என்பதே மிகக் கடினமான கேள்வியாகும். இதோடு சேர்த்து, மக்கள் அதைச் சற்று நின்று கவனிக்கும் வகையில் நாம் ஆர்வத்தை தூண்ட முடிகிறதா? என்ற மற்றொரு கேள்வியும் அதிகரித்து வருகிறது. 

தெற்குப் பிராந்திய நாடுகளுக்கான சர்வதேச அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் தினமான செப்டம்பர் 16 ஆம் திகதி இக்கேள்விகள் மிகவும் பொருத்தமானதாக உணர்த்துகின்றன. 2024 இல் ஐ.நா பொதுச்சபையால் அறிவிக்கப்பட்ட இத்தினம், உலகளாவிய தெற்குப் பிராந்திய நாடுகளில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதன் நோக்கம் தொழில்நுட்பத்தை அணுகுவதோடு மட்டும் நின்றுவிடாமல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை உருவாக்குதல், வளர்த்தெடுத்தல், அணுகுதல், புரிந்து கொள்ளுதல், தேர்ந்தெடுத்தல், தகவமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகிய திறன்களை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது. 

அதாவது, தெற்குப் பிராந்திய நாடுகளை வெறும் தொழில்நுட்பப் நுகர்வோராக மாற்றுவது மட்டுமல்லாமல், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு வடிவமைக்கும் திறனை உருவாக்குவதே இதன் இலக்காகும். இது கல்வியை முதன்மைப்படுத்துகிறது; அதேவேளை, அறிவை விநியோகிக்கும் பாரம்பரிய நிறுவனங்களின் வழியாக மட்டுமே கல்வி தற்;போது நிகழ்வதில்லை. 

மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், கற்றல் என்பது எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு மட்டுமே தொடங்குவதில்லை என்பதாகும். கல்வியை ஒரு நோக்கம் சார்ந்த செயலாகவே சிந்தித்து பழகியிருக்கிறோம்: ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்து, படிப்பைப் பதிவுசெய்து, புத்தகத்தைத் திறந்து வகுப்பறைக்குச் செல்கிறோம். ஆனால் இணையத்தில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலானவை அந்த முடிவுக்கு முன்பே நிகழ்கின்றன. முதலில் ஓர் யோசனையைக் காண்கிறோம், ஆர்வம் கொள்கிறோம், பின்னர் அதைப் புரிந்து கொள்ள வேண்டுமா என்று தீர்மானிக்கிறோம். 

செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், பயோடெக்னாலஜி மற்றும் காலநிலை அறிவியல் என நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் ஸ்டெம் (STEM) துறைகளுக்கு இது மிகவும் பொருந்தும். படிக்க வேண்டும் என்ற முடிவுக்குப் பின்னரே மக்கள் இத்துறைகளை எதிர்கொண்டால், ஆரம்ப ஆர்வத்தை உருவாக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோம். தற்செயலான கண்டுபிடிப்புகளே ஒரு பாடத்தை முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. 

அறிவியல் அல்லது தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் எண்ணம் இன்றி செயலியைத் திறக்கும் ஒருவரிடமும் ஸ்டெம் உள்ளடக்கத்தைக் கொண்டு சேர்க்க TikTok போன்ற தளங்கள் உதவுகின்றன. ஒரு சிறிய விளக்கம் அல்லது எதிர்பாராத கேள்வி, கவனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பாடத்திற்குள் நுழைவதற்கான வாயிலாக மாறக்கூடும். தகவல்களின் பற்றாக்குறையை நாம் பெருமளவு தீர்த்துவிட்டோம். ஆனால் தற்போது கவனக் குறைபாட்டை எதிர்கொள்கிறோம். எனவே ஒரு நல்ல ஸ்டெம் வீடியோ தகவலைக் கொண்டிருப்பதுடன், மக்கள் அதில் கவனம் செலுத்துவதற்கான காரணத்தையும் வழங்க வேண்டும். 60 செக்கன் வீடியோ பல ஆண்டுகால கல்விக்கு மாற்றாகாது, ஆனால் கல்வி தொடங்குவதற்கான பல புதிய வழிகளை உருவாக்க முடியும். 

TikTok தனது STEM Feed மூலம் இந்த மாதிரியை பொழுதுபோக்கிற்கு அப்பால் கல்விக்கும் விரிவுபடுத்தியுள்ளது. 2025 செப்டம்பரில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்ளடக்கத்திற்கான பிரத்தியேக தளத்தை உருவாக்கியுள்ளது. இங்கு பயனர்கள் தேட வேண்டிய அவசியமின்றி, உள்ளடக்கமே அவர்களைச் சென்றடைகிறது. இலங்கையில், #STEMTok மூலம் சிங்களம் மற்றும் தமிழில் உள்ளூர் மொழி உள்ளடக்கங்களுக்கும் ஆதரவளிக்கிறது. அறிவு அணுகக்கூடியதாக இருப்பது மட்டுமல்லாமல், மக்கள் வாழும் மொழியிலும் கலாச்சார சூழலிலும் மொழிபெயர்க்கப்படுவதும் னநாயகமாக்கலுக்கு அவசியமாகும். 

இருப்பினும், பார்வையாளர்களைச் சென்றடைவது மட்டுமே அறிவைப் பயனுள்ளதாக்காது. நம்பகமான தகவல்களைப் பிரித்தறியவும் உதவ வேண்டும். TikTok இதன் காரணமாகவே Common Sense Networks மற்றும் Poynter Institute ஆகியவற்றின் மூலம் உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கிறது. அறிவு ஜனநாயகமாக்கலுக்கு தற்போது உட்கட்டமைப்பு தயாராக உள்ளது, இனி பங்கேற்பே தேவை. இலங்கையில் அடுத்த தசாப்தத்தை வடிவமைக்கும் நிபுணர்கள் உள்ளனர். இந்த அறிவு ஆய்வகங்களையும் விரிவுரை மண்டபங்களையும் தாண்டி பொதுவெளியை அடைய வேண்டும். செயற்கை நுண்ணறிவு, பொறியியல், மருத்துவம் மற்றும் கணினி துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளை எளிமையானதாக மாற்றுவதன் மூலம் புதிய தலைமுறைக்கு ஆர்வத்தை தூண்ட முடியும். இலங்கை வெறும் தொழில்நுட்ப நுகர்வோராக இல்லாமல், தனது சொந்த அறிவையும் திறமையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆசிரியர் பற்றி: 

இந்தக் கட்டுரையை எழுதிய மினுக் வீரகோன் தொழில்நுட்ப ஆர்வலரும், SLIIT IT பட்டதாரியுமாவார். மென்பொருள் பொறியியல், STEM கல்வி மற்றும் தொழில்நுட்ப உள்ளடக்க உருவாக்கத்தில் அனுபவம் கொண்ட இவர், STEM கல்வி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தலைப்புகளைப் பரந்த பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாகவும் எளிதாகவும் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற  உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

Mobitel 1278