Sep 25, 2026 - 04:56 PM

மாலைதீவுகளைச் சேர்ந்த Sun Siyam Resorts இன் அங்கமான Sun Siyam பாசிகுடா, 2026 செப்டெம்பர் 27ஆம் திகதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. கலாசாரம், உணவுத் தெரிவுகள் மற்றும் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் இயற்கை அழகு ஆகியவற்றுடன், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான செயற்பாடுகளுடன் கொண்டாடவுள்ளது.
கொண்டாட்டங்கள் பாரம்பரிய இலங்கை உணவுகள் அடங்கிய விசேட buffet விருந்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அரிதாக கிடைக்கும் பிராந்திய சிற்றுண்டிகள் மற்றும் பாரம்பரிய இனிப்பு வகைகளைக் கொண்ட street food festival உம் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட உலக சுற்றுலா தினத்திற்கான mocktail மற்றும் cocktail பானங்கள் நாள் முழுவதும் பரிமாறப்படவுள்ளதுடன், பாரம்பரிய இலங்கைக் கலாசார நடனக் கலை நிகழ்ச்சிகள் தீவின் தனித்துவமான பாரம்பரியத்தை விருந்தினர்களின் கண்முன்னே உயிர்ப்பித்துக் காட்டவுள்ளன. இந்தக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், ரிசோர்ட், விருந்தினர்களுடன் இணைந்து மரநடுகை நிகழ்வு மற்றும் கடற்கரை அல்லது பூங்கா சுத்திகரிப்புப் பணி ஆகியவற்றைத் திட்டமிட்டுள்ளது. இவை இரண்டும் இலங்கையின் வடகிழக்குக் கரையில் பொறுப்புமிக்க சுற்றுலாவை முன்னெடுப்பதற்கான Sun Siyam பாசிகுடாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.
பாசிகுடாவின் அமைதியான கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த ரிசோர்ட், Garden Pavilions, Ocean Pavilions, தனிப்பட்ட நீச்சல் Pavilions மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட கடற்கரை நீச்சல் தடாக Beach Villas உட்பட 34 தனித்துவமான சொகுசு இல்லங்கள், விடுதிகள் மற்றும் அறைகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை, விசாலமான சூழல் மற்றும் சுற்றியுள்ள இயற்கை நிலப்பரப்புடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விருந்தினர்கள் இந்த விடுதி வளாகத்தில் அமைந்துள்ள The Cellar, The Kitchen, The Tea House, The Bar, The Slice and Grill மற்றும் The Beach Shack ஆகிய ஆறு உணவகங்கள் மற்றும் பானக் கூடங்களில் உணவருந்தும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், 30 மீட்டர் நீளமான infinity pool மற்றும் ஆயுர்வேத மற்றும் நல்வாழ்வுச் சிகிச்சைகளை வழங்கும் boutique spa வசதிகளும் இங்கு காணப்படுகின்றன. மேலும், இச்சொகுசு விடுதி, அருகிலுள்ள தேசிய பூங்காக்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்கள் மற்றும் உள்ளூர் கிராமங்களுக்கான சுற்றுப்பயணங்களையும் ஏற்பாடு செய்வதன் மூலம், கடற்கரைக்கு அப்பால் இலங்கையின் உண்மையான வாழ்வியலைக் கண்டுகளிக்கும் வாய்ப்பையும் விருந்தினர்களுக்கு வழங்குகிறது. உலக சுற்றுலா தினம் என்பது, விஜயம் விருந்தினர்களைச் சுற்றுலாத் தலத்துடனும் அதன் தனித்துவத்துடனும் நெருக்கமாக இணைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும் என Sun Siyam பாசிகுடாவின் பொது மேலாளர் அர்ஷத் ரிஃபாய் தெரிவித்தார்.
“சுற்றுலாத் துறையானது மீண்டும் சமுதாயத்திற்குப் பலனளிக்கும் போது மட்டுமே அர்த்தமுள்ளதாக மாறுகிறது என்பதை எமக்கு நினைவூட்டும் அதே வேளையில், இந்தச் சுற்றுலாத் தலத்தை சிறப்பானதாக மாற்றும் அதன் மக்கள், உணவு மற்றும் இயற்கைச் சூழல் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பை உலக சுற்றுலா தினம் நமக்கு வழங்குகிறது. எமது விருந்தினர்களை இலங்கையுடனும் அதன் தனித்துவத்துடனும் நெருக்கமாக இணைப்பதற்கும், இச்சூற்றுலாத் தலத்தை நாம் கண்டதை விட இன்னும் சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்குமான ஒரு நாளாகவே இத்தினம் அமைகிறது.” என்றார்.
செப்டெம்பர் 27 ஆம் திகதி இச்சொகுசு ரிசோர்ட்டில் தங்கியிருக்கும் விருந்தினர்கள், சுவையான உணவு உபசரிப்புகள் முதல் மரநடுகை மற்றும் தூய்மையாக்கல் முயற்சிகள் வரை அனைத்து நிகழ்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
Sun Siyam Resorts இன் Privé Collection வர்த்தக நாமத்தின் அங்கமான Sun Siyam பாசிகுடா, இலங்கையின் வடகிழக்குக் கரையில் பாசிகுடாவின் அமைதியான மற்றும் ஆழமற்ற கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. வெறும் 34 சொகுசு இல்லங்கள் மற்றும் விடுதிகளைக் கொண்ட ஒரு பிரத்தியேக ஹோட்டலான என்பதுடன், பாரம்பரிய கலாசாரம், சுவையான உணவுகள் மற்றும் கடற்கரை எழில் கொஞ்சும் அழகை மையமாகக் கொண்டு, அமைதியான மற்றும் புதிய அனுபவங்களை அளிக்கவல்ல இலங்கைக்கே உரித்தான தனித்துவமான சொகுசு உபசரிப்பை விருந்தினர்களுக்கு வழங்குகிறது. முற்பதிவுகள் மற்றும் விசாரணைகளை +94 65 205 5555, +94 70 242 4263 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு அல்லது www.sunsiyam.com/sun-siyam-pasikudah ஐ பார்வையிட்டு மேற்கொள்ள முடியும்.































