Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
ஜனசக்தி லைஃப், ஆயுள் காப்புறுதியை எதிர்கால தலைமுறையினருக்கான பரிசாக மறுவரையறை செய்து ‘Grand Legacy’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

Sep 25, 2026 - 05:05 PM

ஜனசக்தி லைஃப், ஆயுள் காப்புறுதியை எதிர்கால தலைமுறையினருக்கான பரிசாக மறுவரையறை செய்து ‘Grand Legacy’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
Mobitel Inner 1278

தாத்தா, பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மிகப் பெறுமதியான பரிசு காலத்தால் அழியாத நினைவாக இருப்பதைத் தாண்டி, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முதலீடாக இருந்தால் எவ்வாறு இருக்கும்? 

இக் கேள்விக்கான பதிலாக, JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life Grand Legacy என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், தாத்தா, பாட்டி தமது எதிர்காலத்திற்காக மட்டுமல்லாது அவர்களுக்கு பின்னர் வரும் தலைமுறைகளினதும் சிறப்பான எதிர்காலத்தை கருத்திற்கொண்டு திட்டமிடுவதற்கான ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது. 

வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிரான பாதுகாப்பாக மட்டுமே பார்க்கப்படும் ஆயுள் காப்புறுதியின் பாரம்பரிய கருத்தாக்கத்தை மாற்றி, அடுத்த தலைமுறைக்கான வாய்ப்புகளையும் நிதிப்பாதுகாப்பையும் உருவாக்கும் ஒரு வழிமுறையாக Grand Legacy அதனை உருமாற்றியுள்ளது. இதன் மூலம், தாத்தா, பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில்முறை இலட்சியங்கள் மற்றும் எதிர்காலக் கனவுகளுக்கு பங்களிக்கக்கூடிய நிதி ஆதரவை வழங்க முடியும். 

தமது பேரப்பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் தாத்தா, பாட்டியினருக்கு இயல்பாகவே இருக்கும். அந்த விருப்பத்திற்கு நிதி ரீதியான வடிவத்தை வழங்கும் Grand Legacy, தமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் எதிர்காலத்திற்கு உண்மையான மதிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது. 

ஜனசக்தி லைஃப், 80 வயது வரையிலும் ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த முன்னெடுப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், Grand Legacy திட்டமானது வாழ்க்கையின் பிந்தைய கட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிதித் திட்டமிடல் என்பது தனிநபரின் பாதுகாப்பை மட்டும் நோக்கமாகக் கொண்டதாக இல்லாமல் மூன்றாம் தலைமுறையினரையும் உள்ளடக்கிய எதிர்கால தலைமுறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

Grand Legacy, குடும்பங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான குறுகிய மற்றும் நடுத்தர கால முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. அதே வேளை, வாழ்க்கையின் பிந்தைய கட்டத்தில் ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் இது விரிவுபடுத்துகிறது. இதன் மூலம், தாத்தா, பாட்டியினர் தமது சொந்த நிதித்தேவைகளையும், பேரப்பிள்ளைகளுக்காக உருவாக்க விரும்பும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, மேலும் அர்த்தமுள்ள வகையில் நிதித்திட்டமிடலை மேற்கொள்ள முடியும். 

ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்து தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, புத்தாக்கமான ஆயுள் காப்புறுதித் தீர்வுகளைத் தொடர்ந்து மறுவரையறை செய்வதில் ஜனசக்தி லைஃப் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. Grand Legacy என்பது அந்த அணுகுமுறையின் இயல்பான அடுத்த கட்டமாகும். பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த தாத்தா, பாட்டியினரின் எதிர்பார்ப்புகளை அர்த்தமுள்ள நிதித் திட்டமாக மாற்றுவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. பாரம்பரிய காப்புறுதித் தேவைகளுக்கு அப்பால் சிந்தித்து, தலைமுறைகள் கடந்தும் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இதன் மூலம், தாத்தா, பாட்டியினர் தமது வாழ்நாளில் கட்டியெழுப்பும் எதிர்காலத்திற்கான அடித்தளம், அடுத்த தலைமுறைகளுக்கும் அர்த்தமுள்ள வகையில் சென்றடைய முடியும்.” என்றார். 

தாத்தா, பாட்டியினருக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையிலான தனித்துவமான பந்தத்தை, எளிமையானதொரு பரிசின் ஊடாக வெளிப்படுத்தும் புதிய விளம்பரப் படைப்பின் மூலம் Grand Legacy அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பரிசு காலப்போக்கில் இனிய நினைவாக மாறலாம். ஆனால், Grand Legacy, அப் பரிசை பேரப்பிள்ளையின் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக மாற்றி இன்றைய அன்பையும் பாசத்தையும் நாளைய வாய்ப்புகளாக மாற்றுகிறது. இந்த அறிமுகம், பாரம்பரியமாக பாதுகாப்பை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடந்து, குடும்பங்கள் நிதிப்பாதுகாப்பு, எதிர்கால இலக்குகள் மற்றும் தலைமுறைகளுக்கிடையிலான நிதித்திட்டமிடலை அணுகும் விதத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப ஆயுள் காப்புறுதியைத் தொடர்ந்து பரிணமிக்கச் செய்வதற்கான ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்துகிறது. 

இன்றைய நிதித்தீர்மானங்கள் நாளைய தலைமுறைகளுக்கு எவ்வாறு அதிக வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்ற எண்ணம் குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், Grand Legacy, எதிர்காலத்தை நோக்கி அர்த்தமுள்ள வகையில் திட்டமிடுவதற்கான நிதிக்கருவியாக ஆயுள் காப்புறுதியை நிலைநிறுத்துகிறது. இது, நாளை என்ன நடக்கக்கூடும் என்பதற்காகத் தயாராகுவது மாத்திரமல்ல; நாளைய எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வடிவமைக்க உதவுவதும் ஆகும். 

Janashakthi Life Grand Legacy மூலம், தாத்தா, பாட்டியினர் இன்று மேற்கொள்ளும் நிதி உறுதிப்பாடு, அது மேற்கொள்ளப்படும் தருணத்தைக் கடந்தும் நீண்ட காலத்திற்கு பெறுமதியளிக்கக்கூடியதாக அமையலாம். இதன் மூலம், பேரப்பிள்ளைகள் எதிர்நோக்கும் கல்வி, தொழில், எதிர்கால இலக்குகள் மற்றும் கனவுகளை நனவாக்கும் பாதையில் மேலும் முன்னேறுவதற்கு அவர்களுக்குத் துணை நிற்க முடியும். 

ஜனசக்தி லைஃப் பற்றி 

JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியிலும் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. 

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி - https://www.janashakthi.com/

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278