Sep 25, 2026 - 05:22 PM

இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளரான சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings - CKH) நிறுவனம், Fitch Ratings நிறுவனத்திடமிருந்து பெற்றுவரும் தேசிய நீண்டகால கடன் தர மதிப்பீடான ‘AA+(lka)’ தரத்தை தொடர்ந்து ஆறாவது ஆண்டாகத் தக்கவைத்துள்ளது.
அத்துடன், நிறுவனத்தின் எதிர்கால நிதிநிலை தொடர்பான நிலையான எதிர்பார்ப்பு மதிப்பீடும் தொடர்கிறது. இது இலங்கையின் நியூமேட்டிக் டயர் உற்பத்தித் துறையில் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வலுவான நிதி நிலை மற்றும் தொடர்ச்சியான சந்தைத் தலைமையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
Fitch Ratings நிறுவனத்தின் மதிப்பீட்டு அளவுகோலில் ‘AA+(lka)’ என்பது இரண்டாவது உயர்ந்த தேசிய தர மதிப்பீடாகும். இது நிதிசார் கடப்பாடுகளை நிறைவேற்றும் நிறுவனத்தின் மிக வலுவான திறனை பிரதிபலிக்கிறது. மதிப்பீட்டை தொடர்ந்து உறுதிப்படுத்திய Fitch Ratings, இலங்கையின் உள்நாட்டு நியூமேட்டிக் டயர் உற்பத்தித் துறையில் CKH நிறுவனம் நிலைநிறுத்தியுள்ள முன்னணி இடமும், அதன் வலுவான மற்றும் சவால்களைத் தாங்கக்கூடிய நிதி நிலையும் முக்கிய பலங்களாகக் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, விலை உணர்திறன் அதிகமுள்ள, பொருளாதாரச் சுழற்சிகளால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் கடுமையான போட்டி நிலவும் சந்தைகளில் நிறுவனம் செயல்பட்டு வருவதையும் Fitch Ratings சுட்டிக்காட்டியுள்ளது.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதுடன், இறக்குமதி செய்யப்படும் டயர்களால் போட்டி மேலும் தீவிரமடைந்து வரும் நிலையிலும், CKH நிறுவனம் தனது சந்தை நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என Fitch Ratings எதிர்பார்க்கிறது. இதனையே நிலையான எதிர்பார்ப்பு மதிப்பீடு பிரதிபலிக்கிறது. அதேவேளை, வருவாய் குறையும் காலகட்டங்களிலும் முதலீட்டுத் தேவைகள் அதிகரிக்கும் சூழ்நிலைகளிலும், நிறுவனம் போதுமான அளவிலான கடன் தொடர்பான நிதி வலிமையைப் பேணும் எனவும் Fitch எதிர்பார்க்கிறது.
சமீபத்திய கடன் தர மதிப்பீடு குறித்து சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சானக்க டி சில்வா தெரிவிக்கையில் 'ஒரு நிறுவனத்தின் கடன் தர மதிப்பீடு என்பது, எதிர்கால இலக்குகளை அடைவதற்கான நிதி வலிமையைப் பேணிக்கொண்டே, இன்றைய சூழலில் சரியான முடிவுகளை எடுக்கும் அதன் திறன் மீதான நம்பிக்கையின் அளவுகோலாகும். சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், பல்வேறு பொருளாதாரச் சுழற்சிகளைக் கடந்தும் இந்த மதிப்பீட்டைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பது, நிதி ஒழுக்கத்துடனான நிர்வாகம், செயல்பாடுகளைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் மற்றும் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கான முதலீடு ஆகியவற்றுக்கு நாம் வழங்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான மதிப்பை உருவாக்கக்கூடிய வகையில், மேலும் வலுவான, போட்டித்திறன் மிக்க மற்றும் அதிக திறன்களைக் கொண்ட உற்பத்தி நிறுவனமாக சியெட் களனியை உருவாக்குவதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
இலங்கையின் நியூமேட்டிக் டயர் உற்பத்தித் துறையில் CKH நிறுவனம் தனது முன்னணி நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என Fitch Ratings எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. வலுவான வர்த்தகப் பெயரும், நாடு முழுவதும் பரந்துள்ள விநியோகஸ்தர் வலையமைப்பும் நிறுவனத்தின் சந்தை நிலையை மேலும் உறுதிப்படுத்தும் காரணிகளாக Fitch குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பதற்கும், முக்கிய சந்தைப் பிரிவுகளில் தனது பங்களிப்பைப் பாதுகாப்பதற்கும் CKH மேற்கொள்ளும் நெகிழ்வான விலை நிர்ணய உத்திகள் உதவும் எனவும் Fitch தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்திப் பணிகள், குறிப்பாக ரேடியல் டயர் பிரிவில் தயாரிப்புகளின் தரத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சந்தையில் CKH நிறுவனத்தின் போட்டித்திறனும் மேலும் வலுப்பெறும் என குவைஉh சுட்டிக்காட்டியுள்ளது.
சியெட் வர்த்தகப் பெயர் இத்தாலியில் தோற்றம் பெற்றதாகும். இந்தியா மற்றும் ஜேர்மனியில் அமைந்துள்ள விரிவான ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை வசதிகளின் ஆதரவுடன் சியெட் தனது தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இலங்கையில் டயர் வர்த்தகப் பெயர்களில் அதிக பெறுமதியுடையதாக Brand Finance நிறுவனத்தால் சியெட் தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், LMD நிறுவனத்தால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமம் என்ற விருதையும் சியெட் பெற்றுள்ளது.































