Sep 26, 2026 - 03:54 PM

ஏமனில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்களுக்கும் ஈரானுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏமனின் ஹூதி போராளிகளும் சவூதி அரேபியாவும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஈரான் உதவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அநீதிக்கு உள்ளாக்கப்படும் அனைவருடனும் ஈரான் உறுதியாகத் துணைநிற்கும் என்றும், ஈரான் ஒருபோதும் போரை விரும்பாது என்பதோடு 'ஒரு சகோதரன் தனது சகோதரனுடன் சண்டையிடக் கூடாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.































