Sep 26, 2026 - 02:48 PM

சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிப்பர் மற்றும் மோட்டார் சைக்களில் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி மூன்று டிப்பர் வண்டிகள் மணல் ஏற்றியவாறு மயிலங்காடு - புன்னாலைக்கட்டுவன் வீதியால் சென்ற போது தெல்லிப்பழை சந்தியில் வைத்து பொலிஸார் அவற்றை வழிமறிக்க முற்பட்டனர்.
இருப்பினும் அந்த 3 டிப்பர் வண்டிகளும் முன்னால் வந்த மோட்டார் சைக்கிள்கள் வழியை சீர் செய்து கொடுக்க மணலை வீதியில் கொட்டிவிட்டு தப்பிச் சென்றன.
இருப்பினும் பொலிஸார் வீதி போக்குவரத்து பொலிஸாரை பல இடங்களில் கடமையில் அமர்த்தி குறித்த டிப்பர் வண்டிகளை வழிமறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டி ஒன்றையும், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் டிப்பர் வண்டியின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக, 27 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.































