Sep 26, 2026 - 03:57 PM

அதிக மழை காரணமாக அதிகரித்த கங்கைகளின் நீர்மட்டம் மீண்டும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், குடா கங்கை மில்லக்கந்த பகுதியிலும், கிங் கங்கை பத்தேகம பகுதியிலும், நில்வலா கங்கை தல்கஹகொட பகுதியிலும் இன்னமும் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்க நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நில்வலா கங்கையின் நீர்மட்டம் பனாதுகம பகுதியில் அவதான நிலையில் காணப்பட்ட போதிலும், அதுவும் குறைந்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.































