Sep 27, 2026 - 10:35 AM

காலி பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த குழுவினரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு பெண்களும், ஆண் ஒருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 2 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.































