Sep 27, 2026 - 11:14 AM

பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்றில் வந்த நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர்.































