Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
செலான் அட்டைகள், இலங்கையின் City of Dreams உடன் இணைந்து ‘Lenny Jay’s Michael: Relive the Legend’ இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுகிறது

Sep 29, 2026 - 12:02 PM

செலான் அட்டைகள், இலங்கையின் City of Dreams உடன் இணைந்து ‘Lenny Jay’s Michael: Relive the Legend’ இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுகிறது
Mobitel Inner 1278

செலான் அட்டைகள், மைக்கல் ஜாக்சனின் இசை, மரபு மற்றும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டாடும் நேரடி இசை நிகழ்ச்சியான ‘This Is Michael: Relive the Legend’ ஐ இலங்கையில் நடத்துவதற்காக, இலங்கையின் City of Dreams உடன் இணைந்துள்ளது. 2026 நவம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இலங்கையின் City of Dreams இல் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, செலான் அட்டை வாடிக்கையாளர்களுக்கு உயர்தர பொழுதுபோக்கை அனுபவிப்பதற்கும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவதற்குமான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. 

சர்வதேச ரீதியில் பாராட்டைப் பெற்றுள்ள மைக்கல் ஜாக்சனை நினைவுகூரும் இசை நிகழ்ச்சியான ‘This Is Michael: Relive the Legend’, ஏற்கனவே 15 நாடுகளிலும் 25 நகரங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளது. Lenny Jay இனால் நிகழ்த்தப்படும் இவ்விசை நிகழ்ச்சி, மைக்கல் ஜாக்சனின் குரல், ஆடை அலங்காரம் மற்றும் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அவரது தனித்துவமான மேடைத் தோற்றம் ஆகியவற்றை கௌரவிப்பதுடன் அதனை சிறப்பாகவும் வெளிப்படுத்துகிறது. இந்நிகழ்வுடன் திறமையான பாடகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அடங்கிய குழுவினரும் இணையவுள்ளனர். 

இவ் இணைவு செலான் அட்டைகள் வழங்கும் சலுகைகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், அட்டை வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கைமுறை அனுபவங்களை வழங்குவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம், அட்டை வாடிக்கையாளர்கள் மைக்கல் ஜாக்சனின் உண்மையான தனித்துவத்தை பிரதிபலிக்கும் இசை நிகழ்ச்சியை நேரடியாக அனுபவிக்க முடியும். 

“அத்தியாவசிய தேவைகளுக்கான இன்றியமையாத அட்டை” என்ற உறுதிமொழிக்கு அமைவாக, செலான் அட்டைகள் தனது அட்டை வாடிக்கையாளர்களுக்கு மனதில் நீங்கா அனுபவங்களை வழங்கும் வகையில் சலுகைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Seylan Visa Infinite, Visa Signature மற்றும் World Mastercard அட்டை வாடிக்கையாளர்கள் 20% பிரத்தியேகத் தள்ளுபடியையும், Seylan Visa Platinum, Visa Gold, Mastercard Freedom மற்றும் வரவட்டை வாடிக்கையாளர்கள் 15% தள்ளுபடியையும் பெற்றுக் கொள்ளலாம். 

இக் கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கி பிஎல்சியின் அட்டைகள் பிரிவின் தலைவர் ருசித் லியனகே,“இசை என்பது உள்ளங்களை இணைப்பதற்கும், மனதைத் தொடும் நினைவுகளை உருவாக்குவதற்குமான வழியாகும். மைக்கல் ஜாக்சனின் இசையைப் போன்று இதனைச் சிறப்பாகச் செய்யும் இசை வேறு எதுவும் இல்லை. இலங்கையின் City of Dreams உடனான எமது இணைவு, வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான அனுபவங்களை வழங்குவதில் இரு நிறுவனங்களுக்கும் உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், அட்டை வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் நன்மைகளுக்கு அப்பால், உண்மையிலேயே மறக்க முடியாத வாழ்க்கைமுறை மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களிற்கான வாய்ப்புகளை வழங்குவதில் எமது உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.” என்றார். 

இசை உலகின் மிகச் சிறந்த, நீண்டகாலமாகப் போற்றப்படும் நட்சத்திரங்களில் ஒருவரான மைக்கல் ஜாக்சனைக் கொண்டாடும் ‘This Is Michael: Relive the Legend’ நிகழ்ச்சி, தனித்துவமான அனுபவத்தை வழங்குவதுடன், அட்டை வாடிக்கையாளர்களுக்கு இரசித்து நினைவுகூரக்கூடிய தருணங்களை உருவாக்கும் செலான் அட்டைகளின் பரந்த நோக்கத்திற்கும் வலுசேர்க்கிறது. 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, செலான் அட்டைகள் 2026 செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் ‘Swipe & Win’ ஊக்குவிப்புத் திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் ரூ.20,000 பெறுமதியான இரண்டு VIP நுழைவுச்சீட்டுகளை வெல்லும் வாய்ப்பு 10 வெற்றியாளர்களுக்கு கிட்டும். அனைத்து செலான் கடன் மற்றும் வரவட்டை வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் ரூ.10,000 பெறுமதியான பரிவர்த்தனையை மேற்கொள்வதன் மூலம் இக் குலுக்கலில் பங்கேற்க முடியும். ஊக்குவிப்புக் காலப்பகுதியில் தகுதிபெறும் பன்மடங்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் அட்டை வாடிக்கையாளர்கள் வெற்றி பெறுவதற்கான மேலதிக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

செலான் அட்டை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பிரத்தியேக சேமிப்பு சலுகைகளுடன், மைக்கல் ஜாக்சனை நினைவுகூரும் இவ் இசை நிகழ்ச்சியை நினைவில் நிலைக்கும் இரவாக மாற்றுவதற்கான காரணங்கள் மேலும் அதிகரிக்கின்றன. 

செலான் அட்டை வாடிக்கையாளர்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். தள்ளுபடிகள் நுழைவுச்சீட்டுகள் கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டவை. 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மேலதிக விபரங்களுக்கு www.seylan.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

Mobitel 1278