Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
MOSTREAD
காணொளி
யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

    Mobitel Inner 1278

    400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார். 

    20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் ஐச்சி மற்றும் நகோயா மாகாணங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். 

    மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில், வித்யா ராம்ராஜ் பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், பந்தய தூரத்தை வெறும் 54.75 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 

    இதன் மூலம் இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் அவர் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில், பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55.42 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். 

    2023 ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டின் தகுதிச்சுற்றின் போது வித்யா ராம்ராஜ் 55.42 வினாடிகள் என்ற இலக்கை எட்டி உஷாவின் சாதனையைச் சமன் செய்திருந்தார். 

    தற்போது 55 வினாடிகளுக்கும் குறைவாகக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வித்யா ராம்ராஜ் பெற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டு கோவையில் பிறந்த வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்குபவர். 

    வித்யா ராம்ராஜின் இரட்டைச் சகோதரியான நித்யா ராம்ராஜும் (Nithya Ramraj) ஒரு தேசிய அளவிலான தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் கலக்கி வருகிறார். இருவரும் இணைந்து பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். 

    தனிநபர் தடை ஓட்டம் மட்டுமல்லாமல், இந்தியாவின் 4x400 மீட்டர் மகளிர் மற்றும் கலப்பு ரிலே (Relay) அணிகளிலும் இவர் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காகப் பதக்கங்களை வென்று தந்துள்ளார். 

    இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்துள்ளார் வித்யா. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ரிலே அணியின் முக்கிய வீராங்கனையாகப் பங்கேற்றுள்ளார்.