Sep 29, 2026 - 12:27 PM

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்று தொடர்பாக கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த கொள்கலனைப் பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்குமாறு குறித்த விசாரணைப் பணியக அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்று இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் 'அத தெரண' இலங்கை சுங்கத்திடம் வினவியபோது, அத்தகைய கொள்கலன் குறித்து நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஏற்றுமதிக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றைப் பற்றியே இவ்வாறு தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதனைச் சோதனையிடுவதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பணியகத்துக்கு சோதனையிடுவதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.































