Sep 30, 2026 - 06:32 PM

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. விராட் கோலி, சுப்மன் கில் சதம் விளாசினர்.
இந்த நிலையில் 2 ஆவது போட்டி கவுகாத்தியில் இன்று (30) மதியம் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்து வீச்சை தீர்மானித்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜான் கேம்ப்பெல், கார்ட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கார்ட்டி 9 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார்.
ஜான் கேம்ப்பெல் அதிரடியாக விளையாடி அவர் 65 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 68 பந்தில் 101 ஓட்டங்களை எடுத்த நிலையில் குர்னூர் பிரார் பந்தில் ஆட்டமிழந்தார்.
3 ஆவது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் அமிர் ஜாங்கூ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் சதம் விளாசினர். ஷாய் ஹோப் 94 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 104 ஓட்டங்களை விளாசினார். அமிர் ஜாங்கூ 77 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 114 ஓட்டங்களை விளாசினார். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 182 ஓட்டங்களை குவித்தது.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா, குர்னூர் பிரார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினார்.
இந்திய அணி 406 ஓட்டகள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.































