Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
உலகம்
நடுவானில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த இந்திய விமானி!

Oct 1, 2026 - 09:10 AM

நடுவானில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த இந்திய விமானி!
Mobitel Inner 1278

33 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய விமானியை கத்தியால் குத்தி சக விமானி விமான தகர்ப்பில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் டுபாயை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அவர்கள் தாயகம் திரும்புவதற்காக எமிரேட்ஸ் எயார்லைன்சின் பிளை டுபாய் என்ற விமானத்தில் புறப்பட்டனர். 

இதற்காக, டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி அந்த போயிங் ரக விமானம் நேற்று காலை புறப்பட்டது. 

விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

இந்தியாவை சேர்ந்த தலைமை கேப்டன் ஸ்மித் மச்சர் மற்றும் அவருக்கு உதவியாக ஓமான் நாட்டை சேர்ந்த துணை விமானி ஒருவருடன் விமானம் புறப்பட்டது. 

விமானம் புறப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் சவூதி அரேபியா எல்லையை கடந்து, ஜோர்டான் வான்பரப்பில் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தது. 

அப்போது, விமானிகள் அறையான காக்பிட்டில் யாரும் எதிர்பாராத அந்த பயங்கரம் அரங்கேறியது. 

ஓமான் நாட்டை சேர்ந்த துணை விமானி, திடீரென தான் ரகசியமாக மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, இந்திய கேப்டனான ஸ்மித் மச்சரை நோக்கி வெறியோடு பாய்ந்து கொடூரமாக குத்தினார். 

ரத்த வெள்ளத்தில் சரிந்த கேப்டனிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டை பறித்த அந்த கொடூர துணை விமானி, தற்கொலை தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்ல சதி செய்தார். 

விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் திட்டத்துடன், வெறும் 30 விநாடிகளிலேயே 14 ஆயிரம் அடிக்கு செங்குத்தாக கீழ்நோக்கி சரிக்க செய்துள்ளார். 

ராட்சத ராட்டினத்தில் இருந்து கீழே விழுவதுபோல் விமானம் மரண வேகத்தில் தலைகீழாக சரிந்ததால், உள்ளே இருந்த 170 இஸ்ரேலிய பயணிகளும் மரண பயத்தில் கதறி துடித்தனர். காக்பிட் அறைக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விமான பணிப்பெண்களும் அலறினர். 

காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சர், விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானியுடன் கடுமையாக போராடினார். 

அதே நேரத்தில் விமானத்தில் இருந்து ஆபத்து சிக்னலும் அனுப்பப்பட்டது. அப்போது விமானத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சக விமானிகள் உஷாரானார்கள். 

அப்போது கேப்டன் காக்பிட் கதவை திறக்க, உடனடியாக அவர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கி பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

இதனிடையே, நடுவானில் இருந்து 'விமானம் கடத்தப்பட்டு விட்டது' (ஸ்குவாக் 7500) என்ற அபாய சிக்னல் இஸ்ரேல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது. 

இதனால் எல்லையில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. 174 இஸ்ரேலியர்களின் கதி என்ன? என்ற பீதியில், இஸ்ரேல் நாட்டு ராணுவம் உடனடியாக தனது நவீன போர் விமானங்களை நடுவானில் அவசரமாக பறக்கவிட்டு அதிரடி மீட்புப்பணியில் இறக்கியது. 

ஆனால், அதற்குள் காயமடைந்த இந்திய கேப்டன் மற்றும் விடுப்பில் பயணித்த ராணுவ வீரர்களின் சாதுரியத்தால் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

இதனால் போர் விமானங்கள் திரும்ப பெறப்பட்டன. விமானத்திற்குள் புகுந்த சவூதி அரேபிய பாதுகாப்பு படையினர், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஓமன் நாட்டு துணை விமானியை உடனடியாக கைது செய்து இழுத்து சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் உளவு அமைப்பான 'மொசாட்' கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "இது சாதாரண மோதல் அல்ல; இஸ்ரேலியர்களை குறிவைத்து ஒட்டு மொத்த விமானத்தையும் மோதி அழிக்க நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதி" என அதிரடியாக அறிவித்துள்ளனர். 

தபூக் விமான நிலையத்தில் தவித்த பயணிகளையும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா அரசுகள் கூட்டு ஏற்பாடுகளை செய்துள்ளன. 

நடுக்கடலில் வானில் அரங்கேறிய இந்த பயங்கரவாத சதி முறியடிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக மீட்பதற்கு காரணமான இந்திய விமானிக்கும் உலக அளவில் பாராட்டு குவிந்து வருகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

Mobitel 1278