Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட கட்டுமானத் துறையை மீண்டும் வலுப்படுத்துவது அவசியம்: ஜனாதிபதி

Oct 1, 2026 - 09:45 AM

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட கட்டுமானத் துறையை மீண்டும் வலுப்படுத்துவது அவசியம்: ஜனாதிபதி
Mobitel Inner 1278

இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் கட்டுமானத் துறை நேரடியாகப் பங்களிப்பு செய்வதால், அத்துறையில் நிலவும் தடைகளை இனம் கண்டு அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கி புத்துயிர்ப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதிக்கும் கட்டுமானத் துறையின் முக்கிய பங்குதாரர்களுக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்தக் கலந்துரையாடலின் போது கட்டுமானத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்காலப் போக்குகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இந்தத் துறையை மீள வலுப்படுத்தி நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பங்குதாரர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் கேட்டறிந்தார். 

அத்துடன், தற்போதைய சூழலில் கட்டுமானத் துறை எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டது. 

இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் எவ்வாறான தலையீடுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

Mobitel 1278