Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
கொமர்ஷல் வங்கியானது, தி சொய்சா பெண்கள் வைத்தியசாலையின் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட விடுதிகளைக் கையளித்தது

Oct 1, 2026 - 01:29 PM

கொமர்ஷல் வங்கியானது, தி சொய்சா பெண்கள் வைத்தியசாலையின் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட விடுதிகளைக் கையளித்தது
Mobitel Inner 1278

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட விரிவான புனரமைப்புத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொமர்ஷல் வங்கியானது, அண்மையில் தி சொய்சா பெண்கள் வைத்தியசாலையின் 03 மற்றும் 04 ஆம் இலக்க விடுதிகளை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது. 

இவ்வைத்தியசாலையின் மொத்த நோயாளிகள் பராமரிப்பில் கணிசமான பங்கினைக் கையாளுபவையாக 03 மற்றும் 04 ஆம் விடுதிகள் விளங்குவதுடன், இவை ஆண்டதோறும் சுமார் 2,500 முதல் 3,000 வரையிலான பிரசவங்களையும் 4,000 முதல் 5,000 வரையிலான அனுமதிகளையும் கையாளுகின்றன. நோயாளிகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வசதிகளைக் கணிசமாக மேம்படுத்தும் வகையிலும், ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் நேரடியாகப் பயனளிக்கும் வகையிலும் இப் புனரமைப்புப்; பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

புதுப்பிக்கப்பட்ட விடுதிகளை வைத்தியசாலை அதிகாரிகளிடம் முறைப்படி கையளிக்கும் நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் நிறுவன சமூகப் பொறுப்பு நிதியத்தின் அறங்காவலர்களான, வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன், பிரதி தலைவர் திரு. ராஜா சேனாநாயக்க, முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ஹஸ்ரத் முனசிங்க மற்றும் பிரதம நிதி அதிகாரி திரு. பிரசன்ன இந்திரஜித் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். 

1879 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தி சொய்சா பெண்கள் வைத்தியசாலை, இலங்கையின் முதலாவது மகப்பேறு வைத்தியசாலையாகவும் ஆசியாவின் இரண்டாவது மிகப்பழமையான மகப்பேறு வைத்தியசாலையாகவும் திகழ்கிறது. அத்துடன், 1905 ஆம் ஆண்டில் நாட்டின் முதலாவது சிசேரியன் பிரசவ அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்தமை மற்றும் 1907 ஆம் ஆண்டில் நாட்டின் ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அறுவைச் சிகிச்சை அரங்குகளில் ஒன்றை நிறுவியமை போன்ற வரலாற்றுச் சிறப்புகளும் இவ்வைத்தியசாலைக்கு உரியவைகளாகும். 

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கியின் நிறுவன சமூகப் பொறுப்பு அறக்கட்டளையானது, தனது சுகாதாரம் சார்ந்த முன்னெடுப்புகளின் மூலம் 100-க்கும் மேற்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி உதவியுள்ளது. மேலும், ‘Adopt an Ambulance’ திட்டத்தின் மூலம் அவசர மருத்துவச் சேவைகளுக்குப் பங்காற்றியுள்ளதுடன், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீர் சேமிப்புத் தீர்வுகள் போன்ற இலக்கு வைக்கப்பட்ட சமூக சுகாதார முன்னெடுப்புகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

Mobitel 1278