Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
பல்சுவை
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்!

Oct 1, 2026 - 01:15 PM

பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்!
Mobitel Inner 1278

இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் 20 வயதான தின்ஷா என்பவர் பணிபுரிந்து வந்தார். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 29 ஆம் திகதி மதியம் அந்த ரிசார்ட்டுக்கு 28 வயதான ஜித்து என்பவர் ஆவேசமாக வந்திருக்கிறார். தின்ஷாவிடம் பேச வேண்டும் எனக் கூறி, அவரை ரிசார்ட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். 

பின்னர் ரிசார்ட் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற ஆவேசமடைந்திருக்கிறார் ஜித்து தான் ஏற்கெனவே ஆன்லைனில் வாங்கி மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை உருவிய ஜித்து, தின்ஷாவின் கழுத்தை கறகறவென அறுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரிசார்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வௌவௌத்துப் போயினர். 

தடுக்க முயன்ற ஊழியர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி விரட்டியிருக்கிறார் ஜித்து அதன்பின் ரிசார்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஜித்துவை சுத்துப்போட்டு வளைத்துப் பிடித்தனர். அவருக்கு சரமாரியாக தர்ம அடி கொடுத்த ரிசார்ட் ஊழியர்கள், மரத்தில் கட்டிப்போட்டு, கோயிபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய தின்ஷாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக கோழஞ்சேரியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தின்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். ஜித்துவை கைது செய்த பொலிஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. ஜித்துவும் தின்ஷாவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

சமீபத்தில் ஜித்துவிடம் இருந்து தின்ஷா விலகியதுடன், காதலையும் முறித்துக் கொண்டிருக்கிறார். மேலும், தின்ஷா வேறு சில ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்ததையும் பார்த்து ஆத்திரம் அடைந்திருக்கிறார். 

குறிப்பாக, தின்ஷாவின் செல்போனுக்கு வந்த சில மெசேஜ்கள் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான், ஆவேஷமாக ரிசார்ட்டுக்கு வந்த ஜித்து, தின்ஷாவை பேசுவதற்காக வெளியே அழைத்துச் சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

தற்போது வெளியாகியுள்ள அந்த காட்சிகளில், ரிசார்ட் வளாகத்தில் இருவரும் நடந்து செல்வதும், பின்னர் மரத்தடியில் பேசிக்கொண்டிருப்பதும், அதன்பிறகு நடந்த பரபரப்பான சம்பவங்களும் பதிவாகியுள்ளது. காதல் முறிவால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

Mobitel 1278