Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
கார் மற்றும் முச்சக்கர வண்டி டயர்களுக்கு புதிய தரநிலைகள்!

Oct 1, 2026 - 08:42 PM

கார் மற்றும் முச்சக்கர வண்டி டயர்களுக்கு புதிய தரநிலைகள்!
Mobitel Inner 1278

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்களுக்கு புதிய இலங்கை தரநிலைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளின் கீழ் குறித்த புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 2024 மே 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2384/35 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த தர நிர்ணயம் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் மேலும் திருத்தப்பட்டுள்ளன. 

இதற்கமைய, அந்த ஒழுங்குவிதிகளின் 'B' உபஅட்டவணையில் பயணிகள் கார் டயர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான நியூமடிக் (pneumatic) டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

பயணிகள் கார் டயர்களுக்கு SLS 1212 தரநிலையும், முச்சக்கர வண்டிகளுக்கான நியூமடிக் டயர்களுக்கு SLS 1347 தரநிலையும் பொருந்தும். 

பயணிகள் கார் டயர்களுக்கான H.S. குறியீடு 4011.10.90 என்பதோடு, முச்சக்கர வண்டி டயர்களுக்கான H.S. குறியீடு 4011.90.10 ஆகும். 

இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இலங்கையின் ஏதேனும் ஒரு துறைமுகத்திற்கோ அல்லது விமானநிலையத்திற்கோ கொண்டுவரப்படும் குறித்த டயர்களுக்குச் செல்லுபடியாகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

Mobitel 1278