Oct 1, 2026 - 08:57 PM

அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) இரவு 8.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9 மி.மீ ரகப் பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டு இக்கொலையைச் செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா என்பவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் "லொகு பெட்டி" என்பவரின் சகோதரர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.































