Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

Oct 3, 2026 - 06:29 AM

 பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?
Mobitel Inner 1278

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் ஆயத்தமாகி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். 

பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையை எக்காரணம் கொண்டும் நீக்க வேண்டாம் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அவர் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் நேற்று (2) கையளித்துள்ளார். 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சித் விதானகே, இந்த இறக்குமதி முயற்சிக்கு பின்னால் ஊழல் நிறைந்த அதிகாரிகளும், மோசடி வியாபாரிகளும் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் மோசடி வர்த்தகர்களும் ஊழல் அதிகாரிகளும் உள்ளனர். எனவே, இது குறித்து நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். 

இறுதியாக நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நாட்டிற்கு பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டாம் என்பதே ஆகும்" எனக் குறிப்பிட்டார்.

எண்ணெய்

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278