Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் பாலியல் அத்துமீறல்!

Oct 5, 2026 - 12:05 PM

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் பாலியல் அத்துமீறல்!
Mobitel Inner 1278

இந்தியத் தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையாளரை பதவி விலக வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மூன்று பெண் ஊடகவியலாளர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான மாற்றங்கள் மற்றும் விசேட சீர்திருத்த நடவடிக்கைக்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் மும்பை நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பிரம்மாண்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 

தலைமைத் தேர்தல் ஆணையாளர் கணேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், போராட்ட களத்தில் இருந்த பெண் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

அத்துடன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவியும் செயற்பாட்டாளருமான ஆஹ்னா சிங், பொலிஸார் தனது தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையைப் பிரயோகித்ததாகத் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

இருப்பினும், பெண் ஊடகவியலாளர்கள் மீதான இந்த அத்துமீறலுக்கு இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் (Press Club of India) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

அத்துடன், ஜனநாயக நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தகைய பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கோரியுள்ளார். 

வாக்காளர் பட்டியலில் இருந்து இதுவரை 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், போலி மற்றும் தகுதியற்ற பதிவுகளை நீக்கவே இச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கிறது. 

எனினும், ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக வாக்காளர் பட்டியல் மாற்றியமைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

Mobitel 1278