Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Oct 5, 2026 - 03:47 PM

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
Mobitel Inner 1278

2026ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜோர்ஜ் நாகல் (Georg Nagel) ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. 

ஹெகேமன் மற்றும் நாகல் ஆகிய இருவரும் தனித்துவமான பண்புகளைக் கொண்ட 'சேனல்ரோடாப்சின்' (channelrhodopsin) என்ற புரதத்தைக் கண்டுபிடித்தனர். 

இப்புரதத்தை எந்தவொரு செல்லுக்குள் செலுத்தினாலும், அச்செல்கள் ஒளியின் தாக்கம் பெறக்கூடியவையாக (light sensitive) மாறுவதை அவர்கள் கண்டறிந்தனர். 

கார்ல் டைசெரோத் இப்புரதத்திற்கான மரபணுவை எலிகளின் நரம்புச் செல்லுக்குள் செலுத்தினார். நீல நிற ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம், நரம்புச் சமிக்ஞையைத் தூண்ட அவரால் முடிந்தது. 

பின்னர், வாழும் எலிகளின் மூளையில் நரம்புச் செல்களைக் கட்டுப்படுத்தும் இந்த ஒளி-கட்டுப்பாட்டு சுவிட்சை அவர் வெற்றிகரமாகச் செயல்பட வைத்தார். 

ஒளி மூலம் நரம்புச் சமிக்ஞைகளைக் கட்டுப்படுத்தும் இந்த முறை தற்போது ஒப்டோஜெனடிக்ஸ் (Optogenetics) என்று அழைக்கப்படுவதுடன், உலகளவில் விரைவான தாக்கத்தையும் பெற்றுள்ளது. 

இவர்களில் கார்ல் அமெரிக்காவை சேர்ந்தவர். மற்ற இருவரும் ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். 

இதனை நோபல் பரிசுக்கான அமைப்பின் மருத்துவ குழுவுக்கான செயலாளர் தோமஸ் பெர்ல்மேன் இன்று (5) அறிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278