Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
விளையாட்டு
இந்திய அணியின் தலைவராக புவனேஷ்வர் குமார் நியமனம்!

Oct 5, 2026 - 06:03 PM

இந்திய அணியின் தலைவராக புவனேஷ்வர் குமார் நியமனம்!
Mobitel Inner 1278

ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த இரு முக்கிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 

இந்த ஆண்டுக்கான ஹாங்காங் சிக்சஸ் போட்டிகளில் களமிறங்கும் இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருடன் சேர்த்து மொத்தம் 7 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியில் புவனேஷ்வர் குமாருடன் இணைந்து விளையாடிய ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும், ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ராணா, ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா, ராகுல் திரிபாதி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார், 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன் தொடர்ச்சியாக உபி டி20 லீக் தொடரிலும் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது பழைய பார்மை நிரூபித்தார். இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாகவே அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இத்தொடர் ஹாங்காங்கின் டின் குவாங் ரோடு மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 12 நாடுகள் பங்குபெறும் இப்போட்டியில், ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே களமிறங்குவர். விக்கெட் கீப்பரைத் தவிர அணியின் மற்ற 5 வீரர்களும் தலா ஒரு ஓவர் பந்துவீச வேண்டும். 

ஒரு போட்டியில் அதிகபட்சமாக 5 ஓவர்கள் மட்டுமே வீசப்படும். எந்தவொரு பேட்டரும் 50 ஓட்டங்களை எட்டினால், அவர் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்பது இத்தொடரின் சிறப்பு விதியாகும். கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி சோபிக்கத் தவறிய நிலையில், இம்முறை புவனேஷ்வர் குமார் தலைமையில் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278