Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் பாகிஸ்தானுக்கு புதிய தலைவர்

Oct 5, 2026 - 09:08 PM

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் பாகிஸ்தானுக்கு புதிய தலைவர்
Mobitel Inner 1278

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சாஹிப்சாதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) நியமிக்கப்பட்டுள்ளார். 

இதன் மூலம் கிரிக்கெட்டின் குறுகிய வடிவத்தில் பாகிஸ்தான் அணியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

டி20 உலகக் கிண்ணப் போட்டியில் அணியை வழிநடத்திய சல்மான் அலி ஆகாவிற்குப் பதிலாக ஃபர்ஹான் பொறுப்பேற்கிறார். 

அத்துடன், ஒக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் சல்மான் அலி ஆகா உள்வாங்கப்படவில்லை. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் 383 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்த 30 வயதான ஃபர்ஹான், சமீபத்தில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல வழிநடத்தினார். 

வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஃபர்ஹானுடன் சேர்த்து, அந்த அணியில் இடம்பெற்றிருந்த அப்துல் சமத், சைம் அயூப், ஹசன் நவாஸ், அரஃபாத் மின்ஹாஸ், மாஸ் சாதகத், அப்ரார் அகமத், சுஃபியான் மொகீம் மற்றும் மொஹமட் சல்மான் மிர்ஸா உள்ளிட்ட பல வீரர்கள் சிரேஷ்ட வீரர்கள் தேசிய அணியிலும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 

ஃபர்ஹான் டி20 வடிவத்தின் தலைவராக உயர்த்தப்பட்டுள்ளபோதிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னோட்டமாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முக்கோணத் தொடரில் பங்கேற்கும் ஷஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான 16 பேர் கொண்ட ஒருநாள் (ODI) அணியில் அவர் இடம்பெறவில்லை.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278