Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பல பிரதேசங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

Oct 5, 2026 - 09:42 PM

பல பிரதேசங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?
Mobitel Inner 1278

தாங்கள் எரிபொருளைக் கொள்முதல் செய்யும் விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நேரிடும் என நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தன. 

இது குறித்துக் கலந்துரையாடுவதற்காகப் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி கூடியிருந்ததுடன், எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்திருந்தது. 

இவ்வாறான பின்னணியில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, இந்தக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலையை உயர்த்தியதுடன், ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கத்தினால் மானியமொன்றும் அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும், போதியளவு எரிபொருளுக்கான கட்டளைகளை பிறப்பிப்பதற்கு எரிபொருள் நிறுவனங்கள் தவறியமையே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அந்த சங்கத்தின் தலைவர் டீ.வி சாந்த சில்வா தெரிவிக்கையில், 

இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்றி மக்கள் வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இதற்குக் காரணம் எரிபொருள் தட்டுப்பாடு அல்ல எனவும், ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய நிறுவனங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசலினால் பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாகவே எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியம் இருந்தபோதிலும், அது தமக்கு நஷ்டமாகவே அமைவதாக அந்நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாகவே வழக்கமாக ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு ஓர்டர்களை மட்டுமே அனுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே, அந்த மூன்று நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகிறது. 

ஆனால், CPC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட முடியாது. அவர்கள் ஓர்டர் செய்த எரிபொருள் உரிய நேரத்தில் கிடைக்குமாயின், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு நிலவ முடியாது. 

குறித்த மூன்று நிறுவனங்களினாலும் இதனைச் சரிசெய்துகொள்ள முடியாவிட்டால், இந்நிலைமை தொடர்ந்து நீடிக்கக்கூடும். 

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான தீர்வொன்றுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278