Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பம்!

Oct 6, 2026 - 09:45 AM

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பம்!
Mobitel Inner 1278

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், திரைமறைவில் அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), வைத்தியர் சி.விஜயகுமார் (விராலி மலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்கள் பதவியை இராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். 

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார். எனவே 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. 

இதனால் இந்த 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இன்று (06) இடைத்தேர்தல் நடக்கிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது த.வெ.க. வேட்பாளராக களத்தில் உள்ளார். 

இந்த தொகுதியில் பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத் (அ.தி.மு.க.), சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜானகிராமன் (நாம் தமிழர்) உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய சத்தியபாமா த.வெ.க வேட்பாளராக களம் காண்கிறார். 

இந்த தொகுதியில் சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்டு), கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 2 தொகுதியிலும் 5 முனை போட்டி நிலவுகிறது. 

இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த மையங்களில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி இந்த 2 தொகுதிகளுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 9 ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

 


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278