Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
விளையாட்டு
அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் ஹர்மன்பிரீத்!

Oct 6, 2026 - 12:07 PM

அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் ஹர்மன்பிரீத்!
Mobitel Inner 1278

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். 

பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, இன்று (06) காலை தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக இந்த முடிவை அவர் தெரிவித்துள்ளார். 

தனது அணி தலைவர் பதவி விலகல் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர், 

"அனைத்து வடிவ போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து நான் இன்று விலகுகிறேன். இது எனக்கு எளிதான முடிவல்ல, பல ஆண்டுகால நினைவுகள், உணர்ச்சிகள், தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்கப்போகும் கணங்களைச் சுமந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்குத் தொடர்ந்து எனது முழுப் பங்களிப்பையும் வழங்குவேன் என்றும், அடுத்தகட்ட தலைமுறைக்கு வழிவிடும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

ஹர்மன்பிரீத் கவுரின் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த ஒரே அணி தலைவர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார். 

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கப் பதக்கம் வென்று தந்து அணிக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தார். ஆசியக் கிண்ணத் தொடர்கள், சர்வதேச முத்தரப்பு தொடர்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்புத் தொடர்களில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

ஹர்மன்பிரீத் கவுரின் இந்தத் திடீர் விலகலைத் தொடர்ந்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த அணி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துணை அணி தலைவராக பணியாற்றி வரும் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அடுத்த அணி தலைவராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278