Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
விளையாட்டு
ஓய்வை அறிவித்தாரா ரொனால்டோ?

Oct 7, 2026 - 11:14 AM

ஓய்வை அறிவித்தாரா ரொனால்டோ?
Mobitel Inner 1278

போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். போர்த்துக்கல் அணியின் முகாமில் இருந்து அவர் திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து, அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக செய்திகள் பரவிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சமீபத்திய நேஷன்ஸ் லீக் போட்டிகளுக்காக போர்த்துக்கல் அணியின் முகாமில் இருந்த ரொனால்டோ, பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் தன்னிடம் அளித்த வாக்குறுதியை இருமுறை மீறியதாக குற்றம்சாட்டியுள்ளார். 

நார்வேக்கு எதிரான போட்டியில் சுமார் 30 நிமிடங்கள் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என ஜீசஸ் கூறியதாகவும், அதற்காக இரண்டாவது பாதியில் நீண்ட நேரம் வார்ம் - அப் செய்தும் இறுதியில் களமிறக்கப்படவில்லை என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதன் பின்னர், டென்மார்க்கு எதிரான போட்டிக்கு முன்பாக அணியின் முகாமில் இருந்து அவர் வெளியேறினார். 

தான் அணியை விட்டு வெளியேறிய விதம் சரியானது அல்ல என்பதை ஏற்றுக்கொண்ட ரொனால்டோ, தனது சக வீரர்கள் மற்றும் இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

மேலும், போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பு தன்னை தண்டிக்க வேண்டும் என்றும், அந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அனைத்தையும் விட முக்கியமாக, ரொனால்டோ சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

நான் உடல் தகுதியுடன் இருந்து, எனது கிளப் அணிக்காக சிறப்பாக விளையாடி, கோல்கள் அடித்துக் கொண்டிருந்தால், எனக்கு விதிக்கப்படும் தண்டனை முடிந்த பிறகு போர்த்துக்கல் அணிக்காக விளையாட நான் தயாராக இருப்பேன். என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

Mobitel 1278