Oct 8, 2026 - 06:37 AM

முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08) நடைபெறவுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலபொடஅத்தே ஞானசார தேரர், சாதாரண உடைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களால் அனுப்பப்பட்ட கடிதம் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.































