Oct 7, 2026 - 11:14 PM

பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்கள் மூலம் 2.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 750 கோடி / 7.5 பில்லியன்) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்த மற்றொரு சந்தேகநபரை நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) கைது செய்துள்ளது.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான சந்தேகநபர், வர்த்தக வங்கிகள் ஊடாக 'TT' (Telegraphic Transfers) முறைமையைப் பயன்படுத்தி இப் பெருந்தொகையை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் 6 நிறுவனங்களின் பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பொருட்களை முன்பதிவு செய்வதாகக் காண்பித்துச் சந்தேகநபர் இந்த நிதி மோசடியைச் செய்துள்ளார்.
2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்நிதி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், குறித்த பரிவர்த்தனைகளுக்குரிய எந்தப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.































