Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கவலை

Oct 7, 2026 - 09:08 PM

ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கவலை
Mobitel Inner 1278

நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமையச் சிறையிலடைக்கப்பட்ட பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்குக் வேறு ஆடை அணிவித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமைக்குத் தமது பலத்த கவலையை வௌியிட்டு முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 

அரசியலமைப்புக்கும் நீதித்துறைச் செயற்பாடுகளுக்கும் தடங்கல் ஏற்படக் கூடாது என்பதே தமது நிலையான நிலைப்பாடு என அக்கடிதத்தின் மூலம் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

எனினும், ஒரு பௌத்த துறவியின் காவி உடையை அகற்றுவதோ அல்லது அவரது பிக்குத் தன்மையை இரத்து செய்வதோ வெறும் அரசாங்க நிர்வாக அல்லது சிறைச்சாலை விதிமுறைகளுக்கு மட்டும் உட்பட்ட ஒரு விடயம் அல்ல என்றும், அது கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு உரிய சாசன ரீதியான கடமை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். 

சிறைச்சாலை நிலையான கட்டளைத் தொகுதியின் 550 ஆவது விதிமுறையின்படி, குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்ட கைதிகள் சிறைச்சாலை ஆடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படக் கூடாது. மாறாக அவர்கள் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் அணியப் பழகிய ஆடைக்குப் பொருத்தமான சாதாரண ஆடையை அணிய அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு பௌத்த துறவியைப் பொறுத்தவரை "குற்றவாளியாகத் தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் அணிந்த ஆடை" என்பது அவரது காவி உடையே தவிர வேறு ஆடை அல்ல என்பதை மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

ஐக்கிய நாடுகளின் குறைந்தபட்ச தரநிலை விதிமுறைகளின் 17(3) ஆம் விதியின் பிரகாரம், ஒரு கைதி சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் தனது சொந்தத் தனிப்பட்ட ஆடைகளையோ அல்லது சாதாரண ஆடைகளையோ அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதும் அதில் நினைவூட்டப்பட்டுள்ளது. 

எனவே, எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தொடர்ந்து பிக்குத் தன்மையுடன் ஆஜராவதற்குத் தேவையான நிர்வாக வசதிகளைச் செய்து தருமாறும், சிறைச்சாலையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரது பிக்குத் தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட சந்தர்ப்பம் அளிக்குமாறும் மகாநாயக்க தேரர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278