Oct 8, 2026 - 08:33 AM

அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், அதற்கமைய நேற்று (07) மாலை சந்தேகநபர் வெலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டையொன்றை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்.
சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.































