Oct 8, 2026 - 12:31 PM

4.5 கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பிராந்திய குற்றவியல் விசாரணை பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஜா-எல பகுதியில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளை எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு தராசு ஒன்றும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் போதைப்பொருட்களைப் பிரித்து, பல்வேறு நபர்களுக்கு இந்த சந்தேகநபர் விற்பனை செய்துவந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.































