Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
உறவு வைத்து விட்டு பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டாரு!

Oct 8, 2026 - 11:15 AM

உறவு வைத்து விட்டு பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டாரு!
Mobitel Inner 1278

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது சோசியல் மீடியாவில் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து முத்துக்குமரன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 

முத்துக்குமரன் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். அதுபோல சோசியல் மீடியாவில் முற்போக்கு சிந்தனைகள் பேசி பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வந்தார். அப்போதுதான் அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 

அந்த நிகழ்ச்சியில் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே டைட்டில் வின்னர். ஆனால் அதற்குப் பிறகும் பல விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக சோசியல் மீடியா பிரபலமான வஹிதா என்ற பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். 

இன்ஸ்டா லைவிலேயே அவர் போதை பொருள் எடுத்துக் கொள்ளும் காட்சிகளும் இருக்கிறது. முதலில் ஒரு வீடியோவில் அவர் பேசும்போது என்னுடைய தற்கொலைக்கு காரணம் முத்துக்குமரன் தான் என்று பேசி இருக்கிறார். பிறகு அதே வீடியோவில் கடைசியில் என்னுடைய தற்கொலைக்கு காரணம் நான் தான். 

நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். முத்துக்குமரன் மீது புகார் அதை தொடர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் எனக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று தெரியவில்லை மனதில் இருப்பதை சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறேன். கடந்த முறை நான் முத்துக்குமரனை சந்திக்கும் போது அவர் என்னை வீட்டுக்கு கூப்பிட்டார். அது கொஞ்சம் கடத்தல் தான். நான் ஏற்கனவே கல்யாணம் முடிந்தவள் என்பது அவருக்கு தெரியும். 5 வயதில் ஒரு பையன் இருக்கிறான் பிரேக் அப்பில் இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். 

2 மாதமாக நான் கஷ்டத்தில் இருந்த போது அவர் என்னிடம் பழகி இருந்தார். அப்போது ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார். பிறகு அவருடைய வீட்டில் வைத்து எனக்கு 1,000 முத்தம் கொடுத்தார். நிறைய காதல் கொடுத்தார். அதற்காக நான் காத்திருந்தேன். நான் காதலால் ஏமாற்றப்பட்டதால் அவருடைய காதல் எனக்கு ரொம்பவும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியும் கொடுத்தது. 

என்னை நீங்கள் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை நானும் அவரும் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டோம். காதல் தோல்வி ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில் இருந்த என்னை அவர் பேசியே மயக்கிவிட்டார். நான் தாலி கட்டுகிறேன் என்று சொல்லி எக்கச்சக்க முத்தங்கள் கொடுத்தார். ஆண்களை நம்பக்கூடாது என எல்லாரிடமும் நான் சொல்லுவேன், ஆனால் நானே இப்படி ஆகிவிட்டேன். உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொட மாட்டேன் என்று திருப்பி திருப்பி சொன்னார். தாலி கட்டுவேன் என்று அவர் சொன்ன போது நான் நம்பி விட்டேன். ஆனால் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். 

போதும் சாமி... முடியவில்லை. எல்லாமே முடியப்போகிறது. இனிமேல் எனக்கு தெம்பு இல்லை என்று அந்த வீடியோவில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிகமான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார். இந்த காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் இருக்கிறது. ஆனால் அவரை வைத்தியசாலையில் சேர்த்து அவர் இப்போது உயிர் பிழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்படும் சமயத்தில் முத்துக்குமரன் இது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். 

"நானும் வஹாதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. அது குறித்து தான் நான் கிளாரிட்டி கேட்டிருக்கிறேன். அவர் ஏற்கனவே கொஞ்சம் டிஸ்டர்ஷனாக இருந்தார்" என்று சொல்லி இருக்கிறார். 

இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் முத்துக்குமரனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். சோசியல் மீடியாவில் முற்போக்காக பேசும் நீங்களா இப்படி எல்லாம் பண்ணுனீங்க? உங்களை போய் அண்ணன்னு நாங்க நம்புனாமே.. என்று சில பெண்கள் அவருக்கு எதிராக கமெண்ட் கொடுக்கின்றனர். 

இன்னும் சில ஆண்கள் இப்படித்தான் அடுத்தவர்களைப் பற்றி பேசி அட்வைஸ் செய்பவர்களின் நிஜ வாழ்க்கை இருக்கிறதா? என்று கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். நிஜத்தில் என்ன நடந்தது என்பது பொலிஸ் விசாரணையில் தான் தெரியும்.


MOST READ

காணொளி
உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

Mobitel 1278