Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
காவி உடை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வந்த மற்றொரு கடிதம்!

Oct 8, 2026 - 11:42 AM

காவி உடை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வந்த மற்றொரு கடிதம்!
Mobitel Inner 1278

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளை ஏதேனும் தேவைக்காக சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது, சாதாரண உடைகளுக்குப் பதிலாக அவர்களின் சாசன உத்தியோகபூர்வ ஆடையான காவி உடையை அணிந்து செல்வதற்கு சட்டரீதியான அனுமதி வழங்குமாறு கோரி ஐரோப்பாவின் ஸ்ரீ லங்கா பௌத்த துறவிகள் சங்கம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. 

ஐரோப்பாவின் ஸ்ரீ லங்கா பௌத்த துறவிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சைப்ரஸின் பிரதம சங்கநாயகருமான வணக்கத்திற்குரிய மொரவக சோரத நாயக்க தேரர் மற்றும் அதன் தலைவரும் ஜெர்மனியின் பிரதம நீதி சங்கநாயகருமான வணக்கத்திற்குரிய ரத்மலே புஞ்ஞரதன நாயக்க தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இந்த விசேட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

நாடொன்றின் நீதிமன்றத்திற்கும் அதன் தீர்ப்புக்களுக்கும் குடிமக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், சட்டரீதியாக குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பௌத்த துறவிகள் சிறைச்சாலை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியது இயல்பான ஒரு விடயம் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனினும், சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் சாதாரண உடைகளை அணிந்திருப்பதை பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவதனால், பௌத்தர்கள் மட்டுமன்றி பௌத்தர் அல்லாத மக்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் சமூகத்தில் சமய மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், தண்டனையானது புனர்வாழ்வு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், தனிநபர் ஆளுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும். 

எனவே, சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடை அணிந்து செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது பொதுமக்களின் மகிழ்ச்சிக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நற்பெயருக்கும் பெருமை சேர்க்கும் என அச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தின் பிரதிகள் மகாநாயக்க தேரர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் விடயப்பொறுப்புள்ள அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

Mobitel 1278