Oct 16, 2026 - 09:32 AM -
0

இன்று (16) சந்திர பகவான் விருச்சிகம், தனுசு ராசியின் கேட்டை பின் மூலம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள தினத்தில் மேஷ ராசியை சேர்ந்த பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும், சிறு சிறு சண்டைகள் இருக்கக்கூடியதாகவும், வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு உள்ள நாளாகவும் இருக்கும். மேலும் பணியிடத்தில் மேலதிகாரிகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதிநிலை பொருத்தவரையில் செலவுகள் அதிகமாகவும், வரவு குறைவாகவும் இருக்கும். உன்னுடைய குடும்பத்தில் வாக்குவாதங்கள் இருக்கும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள். தலைவலி, தூக்கமின்மை போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். அறப்பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், வேலை தொடர்பான விஷயங்களில் நண்பர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கப் பெறுவார்கள். இன்று உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும். சமூக பணிகளை ஆர்வத்துடன் செய்வீர்கள். தொழிலில் சிறிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறிய வருமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்பத்தை பொறுத்தவரையில் மகிழ்ச்சியானதாகவும், உறவு வலுப்படக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில், உங்கள் துணையின் ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். இன்று சுக்கிர வழிபாடு செய்யவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சாதகமான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வணிகத்தில் முன்னேற்றம் நிறைந்த நாள். இன்று நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குழந்தைகளைப் பற்றிய உங்கள் கவலைகள் குறையும். ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாளாக அமையும். வியாபாரம் செய்யக் கூடியவர்கள் முன்னேற்றகரமான வாய்ப்புகளை பெறுவார்கள். கமிஷன் துறையில் ஆதாயம் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு குழப்பமான நாளாக இருந்தாலும், இன்று உருவாகக்கூடிய நவபஞ்சம யோகம் காரணமாக வியாபாரத்தில் லாபம் நிறைந்ததாகவும், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியம் உங்களுக்கு ஒத்துழைப்பு தரும். எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மறதி, கவனக்குறைவு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. தொழில் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வதும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும். பண விஷயங்களில் நிலையான தன்மை இருக்கும். குடும்ப விஷயங்களில் சிறுசிறு சண்டைகள் வந்து விலகும். அண்டை வீட்டாரின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சோர்வாக உணர்வீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு போட்டிகள் அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான ராஜயோகம் காரணமாக நல்ல பெறுவீர்கள். உரவுகள் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கக்கூடும்.தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கிறது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றத்தை பெறுவீர்கள். உங்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். ஆரோக்கிய மேம்படக்கூடிய நாள். ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய நாள். வேலை, தொழில் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டிய நாள். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். நிதிநிலை தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும், சேமிப்பு குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று உங்கள் உடல் நலனில் சோர்வாக உணர்வீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சோர்வு அதிகம் ஏற்படக்கூடிய நாள். அதனால் நல்ல ஓய்வு தேவைப்படும். தொழில் செய்யக்கூடிய நபர்களுக்கு வேலைப்பளு குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில பணிகள் நிறைவடைவது உங்களுக்கு மனநிறைவைத் தரும். இன்று உங்களுடைய நிதிநிலை நிலைத்தன்மையுடன் இருக்கும். குடும்பத்தில் மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் கருத்து வேறுபாடுகளோ அல்லது மனக்கசப்புகளோ ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த வேலை முடியாமல் போகுது, சிரமங்கள் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் செய்யக்கூடியவர்கள் பொறுமையை கடைப்பிடிக்கவும். உங்கள் நிதி நிலையை கவனமாக பராமரிக்க வேண்டிய நாள். உங்களுடைய குடும்பத்தை சிறு சிறு மன வருத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படக்கூடிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பல்வேறு விதத்தில் நன்மைகள் கிடைக்கக்கூடிய நாள். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் மூலம் வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் எதிர்பார்த்த விதத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் அல்லது பயணம் தொடர்பான செலவுகளாக இருக்கலாம். உறவினர் ஒருவரைப் பற்றிய கவலை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராஜயோகங்கள் காரணமாக உங்களுக்கு நிதி நன்மைகளும், லாபங்களும் ஏற்படக்கூடிய நாள். நற்செயல்கள் அதிகமாக நடக்கும். வியாபாரம், தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், அதன் மூலம் லாபகரமான சூழலும் உருவாகும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். போதிய முன்அறிவு இல்லாத தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உருவாகும். இன்று நீங்கள் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று அமைதியும், மனநிறைவும் கிடைக்கக்கூடிய நாள். ஆன்மீகத்தின் மீதும், தொழில் மீதும் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய நிதிநிலை ஸ்திரத்தன்மையுடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள். உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்த முடியும். குடும்பத் தொழிலில் குடும்பத்தினரின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். காதல் உறவைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் தொடர்ந்து உரையாடல்கள் நீடிக்கும்.














































